எவ்வித பாரதூரமான வன்முறைச் சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்கெடுப்பு நிறைவு பெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேர்தல்கள் ஆணையாளர் இதனைக் கூறினார்.
இறுதித் தருணத்திலேயே அதிகளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதாகவும் இருப்பினும் பாரதூரமான முறைப்பாடுகள் பதிவாகவில்லை எனவும் குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணையாளர், இன்றைய தினம் எந்தவொரு வாக்கெண்ணும் நிலையத்திலும் வாக்குகளை இரத்து செய்வதற்கான காரணங்கள் ஏற்பட மாட்டாதென தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய
தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய
0 Comments