Subscribe Us

header ads

இரண்டு வயது குழந்தைகள், இருமுறை சொல்லும் அனைத்து சொற்களையும் புரிந்துகொள்கின்றனரா?...



சிறு குழந்தைகளுக்கு புரிய வேண்டும் என்பதற்காக பெற்றோர் மற்றும் உறவினர், அவர்களிடம் ஏதேனும் சொல்லும்போது ஒற்றை வார்த்தை மட்டுமோ, அல்லது மிகச் சுலபமான ஓரிரு வார்த்தைகளையோ பயன்படுத்துவர். ஆனால், குழந்தைகளின் புரிந்துகொள்ளும் திறன் அவர்களது பெற்றோர் எண்ணுவதை விட அதிகம். 

அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், பேராசிரியர் சுதா அருணாச்சலம் தலைமையில் நடத்திய சமீபத்திய ஆய்வில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரு முறை ஒரு வினைச்சொல்லை சொன்னாலே அதைப் புரிந்துகொள்ளும் என உறுதி செய்துள்ளனர்.

ஒரு சம்பவத்தை ஒரு தொடராக இருமுறை சொன்னாலே, குழந்தைகள் அவற்றை அர்த்தம்பட புரிந்து கொள்கின்றனர் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால், அவர்கள் மிக விரைவில் அதிகமான வினைச் சொற்களை கற்றுக் கொள்கின்றனர்.

நூதனமான வார்த்தைகளையும், காட்சியாகவோ, பேசும்போதோ சரியாக புரிந்துகொண்டுவிடும் ஆற்றலுடன் அவர்கள் இருக்கின்றனர். இதுபோல புரிந்துகொள்ளும் குழந்தைகளால் விரைவில் கோர்வையாக பேசவும் முடியும்.

Post a Comment

0 Comments