Subscribe Us

header ads

செல்பி எடுப்பதால் தலையில் பேன்கள் பரவும் அபாயம்: குழந்தைகள் நல டாக்டர்கள் தகவல்...


தற்போது உலகம் முழுவதும் 'செல்பி' மோகம் அதிகரித்துள்ளது. எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் செல்போனில் 'செல்பி' எடுத்துக்கொள்கின்றனர். அப்போது டீன்ஏஜ் வயதினர் தங்களது தலைகளை ஒருவருடன் ஒருவர் சாய்த்து போஸ் கொடுக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு 'பேன்'கள் பரவுகின்றன. இந்த தகவலை குழந்தைகள் நல டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இது போன்ற 'பேன்' தொல்லை இருப்பதாக கூறுகின்றனர். எனவே 'செல்பி' எடுக்கும் போது போட்டோவுக்கு 'போஸ்' கொடுப்பவர்கள் தலைகளை ஒட்டி வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் சிறுவர்களை விட சிறுமிகளுக்கே பேன் தொல்லை அதிகம் இருப்ப தாகவும் தெரிவித்துள்ள னர்.

Post a Comment

0 Comments