Subscribe Us

header ads

மஹிந்தவின் கூட்டத்துக்கு வீதிக்குக் குறுக்காக அமைக்கப்பட்ட அலங்காரங்களை அகற்றிய பொலிஸார்

நீர்­கொ­ழும்பு மாந­கர சபை முன்­றலில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாலை நடை­பெ­ற­விருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­திற்­காக தேர்தல் சட்­ட­வி­தி­களை மீறி அமைக்­கப்­பட்­டி­ருந்த சட்­ட­வி­ரோ­த­மான கட்­ட­வுட்­க­ளையும் கொடி­க­ளையும் பொலிஸார் அகற்­றினர்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கலந்துகொள்­ள­விருந்த தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­திற்­காக நீர்­கொ­ழும்பு – - கொழும்பு பிர­தான வீதிக்கு குறுக்­காக கட்சி அமைப்­பா­ளர்­க­ளினால் அமைக்­கப்­பட்­டி­ருந்த கொடி­க­ளையும், பதாகைகளையுமே பொலிஸார் அகற்­றினர்.
நீர்­கொ­ழும்பு –- கொழும்பு பிர­தான வீதிக்கு குறுக்­காக அமைக்­கப்­ப­ட்­டி­ருந்த பாரிய அள­வி­லான பெனர் தொடர்­பாக பொலி­ஸாருக்கு கிடைத்த முறைப்­பாட்டை அடுத்தே பொலிஸார் இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.
இதே­வேளை, பொலிஸார் இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருந்த போது சம்­பவ இடத்­திற்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நீர்­கொ­ழும்பு தேர்தல் தொகுதி அமைப்­பா­ளரும், முன்னாள் பிரதி அமைச்­சரும் வேட்­பா­ள­ரு­மான சரத்­கு­மார குண­ரத்ன இது­ தொ­டர்­பாக தமது எதிர்ப்பை பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.
கட்­சியின் தலைவர் ஒருவர் தேர்தல் கூட்­டங்­களில் கலந்துகொள்ள வரும்­போதே வீதிக்கு குறுக்­காக அலங்­கா­ரங்­களை செய்ய முடியும் என்ற தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த நடவ டிக்கையை பொலிஸார் மேற்கொண்டதாக அறிய முடிந்தது.

Post a Comment

0 Comments