Subscribe Us

header ads

தொடு ஸ்பரிசத்தால் உயிரினங்களை வசியப்படுத்தி, சொக்கவைக்கும் சீனச் சிறுமி: இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ



சீனாவின் முக்கியத் தொலைக்காட்சி ஒன்றில் ‘சி.சி.டி.வி எஸ்பனால்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ‘பல்வேறு சாகசங்கள் செய்யும் சாதாரண மனிதர்கள்’ குறித்த தொகுப்புகளை வெளியிடுகிறது. அதில் ஒரு சிறுமி சில உயிரினங்களை தொடுஸ்பரிசத்தால் மயங்க வைத்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.


இந்த சிறுமி சில வார்த்தைகளை நாய், பச்சோந்தி, தவளை, கோழி மற்றும் முயல் ஆகியவற்றின் காதுகளில் கூறியவாறு அவற்றை தொடும் சில வினாடிகளில் அவை அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் மயங்கி விடுகின்றன.

தொலைக்காட்சியில் எல்லோரும் ரசித்த இந்த சிறுமியின் சாகசம், தற்போது யுடியூப் தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது. இணையத்தில் சுமார் ஒரு கோடி பேரால் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..,

Post a Comment

0 Comments