ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாது அதற்கு பதிலாக தமது எதிராளிகளின் பழிவாங்கும் நிலைமையே தலைதூக்கியுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாம் பெற்றுக் கொடுத்த விடுதலைக்கு இன்று ஆபத்து ஏற்பட்டுள்ளதோடு மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைமை தோன்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் பட்டப் பகலில் கொலைகள் நடைபெறுகின்றன. நல்லாட்சியில் எதிராளிகள் பழிவாங்கப்படும் நடவடிக்கைகளே அதிகரித்துள்ளன. இன்று அரசியல் ரீதியாக நாம் தீர்க்கமான தருணத்திற்கு வந்துள்ளோம். எனவே இத் தேர்தலில் சிந்தித்து தீர்மானம் எடுக்கவேண்டும்.
0 Comments