நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை நீதியான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்புக் கொடுத்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையாளர் நன்றி தெரிவித்துள்ளார்.
இன்றைய திவயின வாரஇறுதிப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையாளர்,
நடந்து முடிந்த தேர்தல் குறுகிய நாட்களில் ஒரு பெரும் சவாலாக எதிர்கொள்ளப்பட்டது. பொதுமக்களும், ஊடகங்களும் எங்களுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாக அந்த சவாலை எளிதாக வெற்றி கொள்ள முடிந்தது.
அத்துடன் இந்த் தேர்தலின்போது அரசியல்வாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் சட்டத்தை மதித்து, அமைதியான முறையில் பிரச்சாரங்களை முன்னெடுத்து ஒத்துழைப்பு அளித்தார்கள்.
அந்தவகையில் தேர்தலை அமைதியான முறையில், நீதியாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.


0 Comments