தென் இந்திய திரைப்பட கூடம் என்பது மிகப் பிரமாண்டமான ஒரு உலகம் என்றே கூற வேண்டும். அங்கு இருக்கும் கலைஞர்கள் தன்னை அதற்குள் எப்பொழுதும் தக்கவைத்துக்கொள்ள பல முயற்சிகளையும் பல தியாகங்களையும் செய்துக் கொண்டே இருக்கிறார்கள். திரைப்பட பிரபலங்கள் தங்கள் இடங்களை தக்கவைப்பதற்காக பாடுபடுவதும், பிரபலங்களின் வாரிசுகள் அவர்களின் இடத்திற்கு முன்னேற துடிப்பதும், அரசியல் அழுத்தங்களால் பலர் புதிய அறிமுகமாவதும், கலை திறமையுள்ளவர் பலர் சின்னத்திரைக்கு செல்வதும், ஒரு சிலர் எந்த வித சந்தர்ப்பமும் இல்லாது முடங்கிப்போவதும் என்று அங்குள்ள சவால்களை அடுக்கிகொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட பல தடைகள் நிரம்பி இருக்கும் இந்த துறையினுள் தனக்கென ஒரு இடத்தை பல முயற்சிக்கு மத்தியில் பிடித்து, பிரபல நடிகர் கமல்ஹாசன் அவர்களின் ஆசிர்வாதத்தோடு “மையம்” என்ற படத்தில் முக்கிய நாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் நம்ம ஊரைச் சேர்ந்த புத்தளத்தான் ஒருவரை அறிமுகம் செய்வதே இந்த பதிவின் நோக்கம்.
இந்த இளைஞனின் பெயர் Hashim Zain செயின், இவர் சீனி முத்து குடும்பத்தை சேர்ந்த நிசார் அவர்களின் இரண்டாவது புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது. குதிரை குலாம் அவர்களின் அன்பான கரிசனையோடும் முழுமையாக உதவியோடும் இவர் சிறு வயதிலேயே இந்திய சென்று தனது படிப்பை கலைத்துறையில் பயின்றதோடு, பல்வேறுபட்ட சர்வதேச நாடகங்களில் தமிழ் கலையின் நயத்தை மிகவும் சிறப்பாக வெளிப்படித்து கலைத்துறை தென் இந்திய இயக்குனர்கள் மத்தியில் நல்லொதொரு இடத்தை பிடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தனது குடும்பத்தினரினதும் நண்பர்களினதும் உதவியோடும் ஊக்கப்படுத்தலோடும் “மையம்” என்ற ஒரு படத்தை கமல்ஹாசன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு ஒர்ரிரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
-Isham Marikkar-














0 Comments