அபு அலா –
காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் அன்வர் இஸ்மாயிலும்இ நானும் இணைந்து பல்லாயிரக்கணக்கான வாக்குகளை பெற்றுக்கொடுத்து அதன் மூலம் வந்தவர்தான் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமாகிய எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.எம்.எம்.றிஷாம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களையும் ஆதரித்து வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடரந்தும் உரையாற்றுகையில்இ
சகோதரர் அதாஉல்லா கடந்த காலங்களில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாகவும்இ நேற்றுவரையான காலப்பகுதியில் பல அமைச்சுப் பதவிகளை வகிக்கக் காரணமாகவும்இ அவருக்கு அரசியல் வாழ்வு கொடுத்த கட்சியென்றால் அது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே! ஆகும்.
இவ்வாறு பலபேருக்கு அரசியல் அதிகாரங்களை வழங்கவும்இ அவ்வாறானவர்களுக்கு ஒரு அரசியல் முகவரியை கொடுத்த பெருமையும் இக்கட்சிக்கும் தலைமைக்கும் தான் உண்டு என்பதை அவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதாஉல்லாவுக்கும் அவரின் குழுவினருக்கும் நல்ல பாடம் புகட்டிக்காட்டியும் அவர் இன்னும் திருந்தியதாகத் தெரியவில்லை. மீண்டும் மஹிந்தவை கொண்டுவரும் நோக்கிலேயே இன்று அவர் வெத்திலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார். அக்கரைப்பற்று மக்கள் நல்லா படித்தவர்கள் அவர்கள் எப்படி மைத்ரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்க செயற்பட்டார்களோ அதேபோன்று இன்றும் செயற்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கடந்த காலங்களில் மஹிந்த அரசும் அவரின் சகோதரர்களும் எமது முஸ்லிம் சமூகத்துக்கும்இ தாய்மார்களுக்கும்இ பள்ளிவாயல்களுக்கும் எவ்வளவு அநியாயங்களை செய்திருக்கின்றார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இவ்வாறானவர்களை மீண்டும் பிரதமராக்க கொண்டுவரும் முயற்சியில் மிகத் தீவிரமாக சகோதரர் அதாஉல்லா இன்று ஈடுபட்டு வருகின்றார்.
இவர் எமது மக்களை ஒரு அழிவுப் பாதைக்கு மீண்டும் கொண்டு செல்ல முனைகின்றார். யார் எக்கேடு கேட்டுப்போனால் எனக்கென்ன தானும்இ அவர் சார்ந்த குடும்பத்தினரும் நல்லா வாழ்ந்தால் போதும் என்று நினைத்து செயற்படும் அதாஉல்லாவின் செயலை இனி ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும்இ அதன் தலைமையும் பார்த்துக்கொண்டிருக்காது. அதற்கான முடிவை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இன்று எடுத்துள்ளது.
இதேபோல்தான் அக்கரைப்பற்று மக்களும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு நல்லதோர் பாடத்தை புகட்ட முன்வந்துள்ளதை நான் இன்றைய கூட்டத்தினூடாக அறிய முடிகின்றது என்றார்.
0 Comments