Subscribe Us

header ads

ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவது கனவில் மாத்திரமே!- அநுரகுமார


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிண்டும் அதிகாரத்திற்கு வருவது கனவில் மாத்திரம் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

கடந்த காலத்தில் ஜனாதிபதி அதிகாரம், அமைச்சரவை அதிகாரம், கிராமத்தில் சமுர்த்தி அதிகாரிகள் என அனைவரையும் கைக்குள் வைத்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டார்.

அததுடன் காவல்துறையினர், இராணுவத்தினர் என அனைவரையும் தன் பக்கம் வைத்துக்கொண்டும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்சவினால் இம்முறை ஒரு போதும் வெற்றி பெற முடியாது.

இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலர் மஹிந்த ராஜபக்ச பின்னால் சென்று அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றனர்.

எனினும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதமட 17ம் திகதிக்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணம் துரதிருஷ்டவசமாக மூலைக்கு செல்வது உறுதி என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments