Subscribe Us

header ads

மகிந்த கூறுவதை கேட்டால் சிரிப்பு வருகிறது: ரில்வின் சில்வா


மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அரச சேவை அழிக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச ஆட்சியில் அரச ஊழியர்கள் சுரண்டப்பட்டனர். முழு அரச சேவையையும் குடும்ப சொத்தாக அவர்கள் பயன்படுத்தினர்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகள் இலவசமாக பெறப்பட்டன. கட்டணம் செலுத்தப்படவில்லை. இறுதியாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பெற்றுக்கொண்டனர்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனது.

அத்துடன் பேருந்து சாலைகளுக்கு வருமானம் இல்லாமல் போனது. இலங்கை போக்குவரத்துச் சபையின் அழித்த பாவத்திற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கமே பங்காளியாகியுள்ளது.

துறைமுகத்திற்கும் இதே நிலைமைதான், துறைமுக ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினர்.

மகிந்த தற்பொழுது அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 25 ஆயிரம் ரூபா அதிகரிக்க போவதாக கூறுகிறார். இவற்றை கேட்கும் போது சிரிப்புத்தான் வருகிறது.

தனது ஆட்சிக்காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் 5 சதத்தை கூட சேர்க்காத தலைவர்தான் தற்போது அடிப்படைச் சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதாக கூறுகிறார் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments