ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள் இரண்டு குழுக்கள் செயற்படுவதாகவும் அவர்கள் வேலை செய்வதும் குழுக்களாகவே என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படுதோல்வி அடையும் என அவர் கூறியுள்ளார்.
கட்சியினால் ஒரு கொள்கைக்கு செயற்பட முடிவில்லை என்றால் கட்சிக்காரர்களுக்கு கட்சி குறித்து தெளிவில்லை என அர்த்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments