Subscribe Us

header ads

(அம்பாறை) விபத்து - வாகன விபத்தில் ஒருவர் பலி

அபு அலா –

அக்கரைப்பற்று பொத்துவில் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிலம் குடா சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக  திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கொட்டஞ்சேனையைச் சேர்ந்த கருணாநிதி ஸ்டீபன் (வயது 18) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

இவருடன் வந்த பரமலிங்கம் மதன் ன்பவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்பொத்துவிலிலுள்ள திருமண வீடொன்று சென்று விட்டுமோட்டார் சைக்கிளில் வந்த இவர்களைகைதிகளை ஏற்றிச்செல்லும் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தற்போது உயிரிழந்தவரின் சடலமும் மோட்டார் சைக்கிலும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பா மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்



Post a Comment

0 Comments