அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
எனதன்பின் உறவுகளே............
மக்கள் முன் பரப்பப்பட்ட குற்றச்சாட்டு நான் முஸ்லிம்களுக்காக வாக்குக்கேட்கவில்லையாம்
ஐ.தே.கட்சியானது புத்தளம் தொகுதியிலே SLMC , ACMC ஆகிய இரு கட்சிகளையும் உளவாங்கித்தான் போட்டியிட்டது.
ஐ.தே.க எம்மை இனைத்து அதன் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் கட்சி இனைத்த எங்களை ஏமாற்றி விட்டார் என்ற அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதட்காகவும் புத்தளம் தொகுதியில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் வரவேன்டும் என்ற நல்ல என்னத்தோடும் அஷோகா அவர்களை புத்தளம் தொகுதியின் அமைப்பாளராக ஐ.தே.க நியமித்தபோது கட்சியின் உயர்பீடத்தில் விநவினேன் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழுகின்ற பகுதியிலே பெரும்பான்மை இன சகோதரரை அமைப்பாளராக நியமிப்பது பிரச்சினையாக அமையாதா என அதற்கு கட்சி எனக்கு அளித்த பதில் ஐ.தே.க இல் இன வாதம் கதைப்பதற்கு இடமில்லை சகல இனத்தவரும் இலங்கையர் என்ற ஒரே ஒரு இனம் தான் இலங்கையில் உள்ளது.
ஆகவே யாரும் எங்கேயும் இனவாதம் கதைக்க முடியாது ஏற்கனவே வாக்கு வங்கியுடன் உள்ள ஒருவரையே புத்தளம் தொகுதிக்கு நியமிக்கின்றோம் 26 வருடங்களாக இழந்துள்ள மக்கள் பிரதிநிதியை வென்றெடுங்கள் அவர் வென்றால் இனி வருவது தொகுதி ரீதியான தேர்தலாக இருக்களாம் அப்படியாயின் அவர் அவருக்கு வளங்கப்பட்ட தெகுதிக்குள் மாத்திரமே அபிவிருத்திகளை ஒதுக்க முடியும். மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியிலே உங்களுக்கான கட்டாய பொறுப்பு உள்ளது உங்கள் தொகுதி அமைப்பாளர் அஷோக வடிகமங்காவ அவரகளை பலப்படுத்தி அவரை உங்கள் பிரதிநிதியாக பெற்றுக்கெள்வது உங்களின் பொறுப்பு என்றார்கள். அதனடிப்படையிலே நான் எமது கட்சி இனைத்துக்கொன்ட இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளான சகோ. பைரூஸ் சகோ. நவ்வி ஆகியோருடன் எமது புத்தளம் தொகுதியின் ஐ.தே.க அமைப்பாளர் அஷோக வடிகமங்காவ அவர்களையும் இனைத்தவனாக வாக்குகள் கேட்டேன்.
என் மீதான காழ்ப்புனர்ச்சி காரனமாக இதனை திரிபு படுத்தி செல்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
என்னுடைய என்னம் நோக்கம் என்பதை அறிந்தவனாக அல்லாஹ் உள்ளான்.
-A.O Alikhan-


0 Comments