-NDPHR-
![]() |
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா |
வீதிகளில் இரவும் பகலும் பவனி வரும் சில கட்டாக் காலி இளைஜர்கள் பணத்துக்குச் சோரம் போய் தன் நிலை மறந்து சிலரை தேசியத் தலைவர்கள் எனக் கூறி தோளில் சுமக்கும் கேவலமான காட்சியானது மிகவும் அருவருக்கக் கூடியதாகவும் ,அத் தலைவர்கள் வாய் கூசாமல் மேடை மீது நின்று பொய் சொல்லுவதும்,மாற்றுக் கட்சியை மீண்டும் மீண்டும் தூற்றுவதும், மற்றவர்கள் வெற்றி அடைய மாட்டார்கள் என்று சபதமிட்டு அத்துடன் அவர்கள் மீது சாப மிடுவதும் அதைக் கேட்டு கை கொட்டிக் கோஷமிட்டு ஆரவாரத்தோடு கோசம் ஒழுப்புவதும் படித்த மக்களிடம் ஒரு வெறுப்புணர்வைக் கொண்டு வந்துள்ளதாகவும் நமக்கு கள நிலைவரம் அறிந்த மக்கள் அறிவிக்கிறார்கள்.
வாயைத் திறந்தாலே பொய் பேசும் அரசியல் வாதிகள் நமக்கு வேண்டுமா ?
உதாரணமாக ஒரு தேசியத் தலைவர் என சில கட்டாக் காலிகளினால் அழைக்கப் படும் ஒரு அரசியல்வாதி சாய்ந்தமருது ஜும்மாப் பள்ளிவாசலுக்குள் புகுந்து அரசியல் செய்ய முனைந்த போது அங்கு கலவரம் வெடித்தது . அதை சரி என நிருப்பிக்க தலைவர் அரசியல் நோக்கமாகப் போகவில்லை தொழுகைக்குப் போனதாக திரிபு படுத்தினார்கள் ,நாம் மடையர்கள் அல்ல காலை 10.30 மணிக்கு என்ன தொழுகை என்பதுதான் இங்கு கேள்வி.
இதே அரசியல் வாதி அன்று இசாத் தொழுகைக்குப் போகாமல் கூட்டத்தில் முழங்கினார் என்பதையும் மக்கள் அறியாமல் இல்லை
தற்போது திகா மடுள்ள மாவட்டத்தில் முன்பு போல் படித்த வர்க்கத்தினரை இவ் அரசியல் வாதிகளால் ஏமாற்ற முடியாது என்பதையும் காணக் கூடியதாகவே உள்ளது
எங்களது ஆதரவாளர்கள் அமைதியான முறையில் கட்டாக் காலி முறையில் பணத்தை வீசி எறிந்து அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளுக்கு வருகின்ற 17ஆம் திகதி தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் எமக்கில்லை .
அமைதி வழி சென்று தங்களது வாக்குகளை எமது ஒட்டகச் சின்னத்துக்கு அளிக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
0 Comments