-Post Media-
ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் உள்ள அக்குரணை, பூஜாபிட்டிய மற்றும் ஹாரிஸ்பத்துவ பிரதேசங்களை சேர்ந்த 362 ஐக்கிய தேசிய கட்சி கிளைகளுக்கு நேரில் சென்று தனது பிரசார நடவடிக்கைகளை செய்து முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக அமைச்சர் ஹலீம் இன்று தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷ தலைமையில் சென்ற அரசாங்கத்தில் இயங்கி வந்த நீலப்படை (நில் பலகாய) தலைவி காஞ்சனா மதுவந்தி குமாரியும் ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் நடைபெற்ற இந்த கூட்டங்களில் தனது உருக்கமான பேச்சு திறமையினால் மக்களை கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்ற மாகான சபை தேர்தலில் ஸ்ரீ ல சு கட்சியில் போட்டியிட்ட குடுகல ஜயரத்ன அவர்களும் முன்னால் அக்குரணை ஸ்ரீ ல சு க பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் அமரவீரவும் அமைச்சர் ஹலீமுடன் இணைந்து கொண்டனர்
இதைத்தவிர நாவலப்பிட்டிய, கம்பளை, ஹெவாஹெட, உடுநுவர, யடினுவர, கலகெதர, பாததும்பர போன்ற தேர்தல் தொகுதிகளில் பல பிரதேசங்களில் தனது பிரசார நடவடிக்கைகள் தடையின்றி அனேகமாக முடிவுற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் எஞ்சிய பகுதிகளிலும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments