Subscribe Us

header ads

நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது பிரசார போர்


எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான பிர­சார செயற்­பா­டுகள் யாவும் இன்று வெள்ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளன. இந்­நி­லையில் பிர­தான அர­சியல் கட்­சிகள் இன்­றைய தினம் தமது இறுதிப் பிர­சாரக் கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன. அந்­த­வ­கையில் கடந்த 7 ஆம் திகதி ஆம்­ப­மான பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான பிர­சார போர் இன்று நள்­ளி­ர­வுடன் ஓய்­வ­டை­கின்­றது.
அதன்­படி எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை எட் ­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் தேர்தல் திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ளது.
இதே­வேளை இன்று வௌ்ளிக்­கி­ழமை நள்­ளி­ர­வுக்கு பின்னர் அர­சியல் கட்­சி­களோ வேட்­பா­ளர்­களோ எவ்­வி­த­மான தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட முடி­யாது என்று மேல­திக தேர்­தல்கள் ஆணை­யாளர் எம்.எம். மொஹம்மட் தெரி­வித்தார்.
குறிப்­பாக தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களை நடத்­துதல் சிறி­ய­ள­வி­லான கூட்­டங்­களை நடத்­துதல் விடு­க­ளுக்கு சென்று வாக்­க­ளிக்­கு­மாறு கோருதல் துண்டு பிர­சு­ரங்­களை விநி­யோ­கித்தல் உள்­ளிட்ட எந்­த­வொரு பிர­சார நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
இதே­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் குரு­ணாகல் மாவட்­டத்­திலும் ஐக்­கிய தேசிய கட்­சியின் இறுதி பிர­சாரக் கூட்டம் மரு­தா­னை­யிலும் இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்­ளன.
அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி ஜன­நா­யகக் கட்சி தமிழர் விடு­தலை கூட்­டணி இலங்கை தொழி­லாளர் தமிழ் முற்­போக்கு முன்­னணி உள்­ளிட்ட கட்­சி­களும் தமது இறுதிக் கட்ட பிர­சார கூட்­டங்­களை இன்­றைய தினம் நடத்­த­வுள்­ளன.
மஹிந்த தலை­மையில் 
குரு­ணா­கலில் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் இறுதிப் பிர­சாரக் கூட்­ட­மா­னது அதன் வேட்­பாளர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­களும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
ரணில் தலை­மையில்
கொழும்பில் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய தேசிய கட்­சியின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார். மேலும் ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ளர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க ராஜித்த சேனா­ரட்ன மற்றும் அர்­ஜுன ரண­துங்க உள்­ளிட்ட பலரும் இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.
கூட்­ட­மைப்பின் கூட்டம்
இதே­வேளை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இறுதி பிர­சாரக் கூட்டம் கிளி­நொச்­சியில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. யாழ்ப்­பாண தேர்தல் மாவட்­டத்தில் போட்­டி­யிடும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து இன்று மாலை 4 மணிக்கு கிளி­நொச்சி கரைச்சி பிர­தே­ச­சபை வளா­கத்தில் இந்த பொதுக்­கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த பொதுக்­கூட்­டத்தில் யாழ்ப்­பாணத் தேர்தல் மாவட்­டத்தில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் கலந்து கொள்­ள­வுள்­ள­துடன், அவர்­களை ஆத­ரித்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் முக்­கிய தலை­வர்கள், உரை­யாற்­ற­வுள்­ளனர்.

வாக்­காளர் அட்டை விநி­யோகம்
இது இவ்­வாறு இருக்க பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான ஏற்­பா­டுகள் அனைத்தும் தேர்தல் திணைக்­க­ளத்­தினால் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. வாக்­காளர் அட்­டைகள் வாக்­கா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் விசேட விநி­யோக தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு வாக்­காளர் அட்­டைகள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

எனினும் வாக்­காளர் அட்டை கிடைக்­கா­த­வர்கள் அருகில் உள்ள தபால், உப தபால் நிலை­யங்­க­ளுக்குச் சென்று ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தி வாக்­காளர் அட்­டையை பெற்றுக் கொள்­ளலாம்.

வாக்­க­ளிப்பு
எதிர்­வரும் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாடு முழு­வதும் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு நடை­பெறும்.
12344 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள்
அத்­துடன் நாடு முழு­வதும் 12344 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் தேர்­த­லா­னது 2014 ஆம் ஆண்டு வாக்­காளர் இடாப்பின் பிர­காரம் நடை­பெ­ற­வுள்­ளது.

17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் சார்­பாக 6151 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

2 இலட்சம் அரச ஊழி­யர்கள்
மேலும் தேர்தல் செயற்­பா­டு­க­ளுக்­காக சுமார் இரண்டு இலட்சம் அரச ஊழி­யர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். வாக்­க­ளிப்பு நட­வ­டிக்­கை­களில் 125000 அரச ஊழி­யர்­களும் வாக்கு எண்ணும் செயற்­பா­டு­களில் 75000 அரச ஊழி­யர்­களும் ஈடு­ப­ட­வுள்­ளனர்.
70549 பொலிஸார் பாது­காப்பு கட­மையில்
தேர்­த­லுக்கு தேவை­யான பாது­காப்பு ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. பாது­காப்பு கட­மையில் 70549 பொலி­ஸாரும் 4225 பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் திரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்களிப்பு நிலையங்களுக்கு மட்டும் 24798 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இதனை விட 2885 நடமாடும் பாதுகாப்புக் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் 49 வாக்கெண்ணும் நிலையங்கள் தொடர்பில் 3683 பொலிஸார் பாதுகப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் 17 ஆம் திகதி மாலையில் இருந்து கடமையில் இருப்பர். இவ்வாறு தேர்தல் செயற்பாடுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments