Subscribe Us

header ads

புலிகளைத் தொடர்புபடுத்தி அரசியல் செய்யும் வியூகத்துக்கு 17 ஆம் திகதியுடன் முற்றுப்புள்ளி


புலி­களை தொடர்­பு­ப­டுத்தி அர­சியல் செய்யும் யுகத்­திற்கு எதிர்­வரும் 17ஆம் திக­தி­யோடு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும். ஐ.தே.முன்­னணி ஆட்­சியில் புலி­க­ளுக்கு இட­மில்லை. பிரி­வி­னை­வா­தத்­திற்கும் இட­மில்லை என உத்­த­ர­வா­த­ம­ளிக்கும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, யாழ்ப்­பாணம் தொடக்கம் மாத்­தறை வரை­யி­லான மக்கள் ஐ.தே.முன்­ன­ணிக்கே வாக்­க­ளிப்­பார்கள் என்றும் நம்­பிக்கை வெளி­யிட்டார்.
கொழும்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற நல்­லாட்­சிக்­கான ஐ.தே.#முன்­ன­ணியின் ஊட­க­வி­ய­லாளர் மா­நாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் சம்­பிக்க ரண­வக இவ்­வாறு தெரி­வித்தார்.
அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இங்கு தொடர்ந்து உரை­யாற்­றுகையில், 19ஆவது திருத்­தத்­திற்கு அமைய நான்கு வரு­டங்கள் அதா­ வது 2020 ஆம் ஆண்­டு­வரை ஜனா­தி­ப­தியால் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யாது.
அதே­போன்று பாரா­ளு­மன்­றத்­திலும் கலைப்­ப­தற்­கான எந்தத் தீர்­மா­னத்­தையும் எடுக்க முடி­யாது. எதிர்­வரும் 2020ஆம் ஆண்­டு­வரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே பதவி வகிப்பார். அவ­ரோடு இணைந்து செயற்­ப­டக்­கூ­டிய ஸ்திர­ மான ஆட்சியை ஐ.தே.முன்­ன­ணி­யி னால் மட்­டுமே ஏற்­ப­டுத்த முடியும்.
இன்று எமக்கு எதி­ராக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களும் மக்­களை அச்­சத்­துக்­குள்­ளாக்கும் பொய்ப் பிர­சா­ரங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டுகின் றன. புலிகள் மீண்டும் தலை­தூக்­கு­வ­த­னாலும் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் பிர­சா­ரங்கள் மேற்­கொள்ளப்­ப­டுகின் ­றன. புலிகள் தொடர்பில் எம்­மிடம் இரட்டை வேடம் கிடை­யாது. யுத்தம் நடை­பெற்ற போதும் யுத்தம் முடிந்த பின்­னரும் மஹிந்த ராஜபக் ஷ புலி­க­ளு­டனும், புலம்­பெயர் புலி­க­ளு­டனும் தொடர்­பு­களைப் பேணி வந்தார்.
இது இர­க­சி­ய­மான விட­ய­மல்ல. ஐ.தே.முன்­னணி ஒரு போதும் மீண் டும் புலிகள் தலை­தூக்க இட­ம­ளிக்­காது. தேசிய பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. புலி­களை தொடர்­பு­ப­டுத்தி அர­சியல் செய்யும் யுகத்­திற்கு எதிர்­வரும் 17ஆம் திக­தி­யுடன் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ படும்.
புலிகள் மட்­டு­மல்ல, நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் எதி­ரான எந்த சக்­தி­க­ளையும் தலை­தூக்க இட­ம­ளிக்க மாட்டோம். கடந்த ஆட்­சியில் நாட்­டுக்குள் வெள்­ளைவேன் கடத்­தல்கள், கொலைகள், எதனோல் வியா­பா­ரிகள், போதைப் பொருள் வியா­பா­ரிகள் மற்றும் ஊழல் மோச­டிகள் தலை­வி­ரித்­தா­டின.
ஜன­வரி 8 ஆம் திக­திக்கு பிறகு நாட்டில் இவ்­வா­றான அரா­ஜ­கங்கள் இடம்­பெ­ற­வில்லை. எனவே இதன் பின்­ன­ணியில் யார் இருந்­துள்­ளனர் என்­பதை மக்கள் புரிந்து கொண்­டி­ருப்­பார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவின் இருண்ட யுகம், நீலப் படை ­ய­ணியின் பயங்­க­ர­வாதம், தாஜுதீன் கொலை, எக்­ னெ­லி­ய­கொட காணாமல்போமை ஆகியவற்றின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யாரென்­பது எதிர்­கா­லத்தில் நீதி­மன்­றங்கள் மூலம் வெளி­யாகும். ஒற்­றையாட்சி முறைமை பிர­த­மரால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. எனவே நாடு பிரியும் என்­பது மக்­களை ஏமாற்றும் பொய்ப்­பி­ர­சாரம்.
வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்கு ஐ.தே.முன்­ன­ணி­யினால் மட்­டுமே தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடி யும். இத் தேர்­தலில் யாழ்ப்­பாணம் தொடக்கம் மாத்­தறை வரையில் மக்கள் எமக்கு வாக்­க­ளிப்­பார்கள். இலங்­கைக்கு எதி­ராக கடந்த மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணைக்­ குழு அறிக்கை வெளி­யி­ட­வி­ருந்­தது.
அது வெளி­யி­டப்­ப­டு­வதை தடுத்து கால அவ­கா­சம்­பெற எம்மால் முடிந்­தது. ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் இவ்­வெற்­றியை பெற்றோம். மஹிந்த ராஜ பக் ஷ அமெ­ரிக்­காவை பகைத்துக் கொண்டது “தேசப்பற்­றுள்ள” புத் திக் கூர்மை­யற்ற தூரநோக்­கில்­லாத வெளி­நாட்டுக் கொள்­கை­யினால் ஆகும்.
நாம் எமது படை­யி­னரை பாது­காப்போம். உள்­ளக விசா­ர­ணைக்கு இட­ம­ளிப்போம். யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து மஹிந்த ராஜபக் ஷவையும், கோத்தபாய ராஜபக் ஷவையும் நாம் பாதுகாப்போம்.

எனவே அவர்கள் எமக்கு வாக் களிக்க வேண்டும். இந்தியா, சீனா உட்பட உலக நாடுகளுடன் நல்லு றவை ஏற்படுத்திக் கொண்டு நாட்டை முன்னேற்றுவோம். தனி யொரு குடும்ப நன்மையல்ல, நாட் டிலுள்ள 55 இலட்சம் குடும்பங்க ளின் நன்மைகருதி எதிர்வரும் 17 ஆம் திகதி தீர்மானம் எடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments