ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் சில விளக்கங்களை முன்வைத்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடக நிறுவனங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் கடிதத்தை தொடர்ந்தும் பிரசாரத்துக்கு உட்படுத்த வேண்டாமென்றும், மஹிந்த ராஜபக்ஷவின் பதில் கடிதம் இன்றைய தினத்துக்குள் கிடைக்கப்பெற்றால், அதனையும் முறையாக வெளியிடும்படியும் தமது கடிதத்தின் ஊடாக தேர்தல் ஆணையாளர் ஊடக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


0 Comments