Subscribe Us

header ads

எங்களது பார்வையில் மஹிந்தவும் ஒன்றுதான் மைத்திரியும் ஒன்றுதான் ரணிலும் ஒன்றுதான்


எங்களது பார்வையில் மஹிந்தவும் ஒன்றுதான் மைத்திரியும் ஒன்றுதான் ரணிலும் ஒன்றுதான். முஸ்லிம்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்குவோம் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான ஆஸாத் சாலி, சாய்ந்தமருதில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும்போது இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆஸாத் சாலி, ரணில் வந்தால் பிரச்சினை வரும் என்றும், மஹிந்த வந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்றும் வாய்கிளிய கத்தித் திரிகின்றனர். நான் ஒன்றை சொல்லிக் கொள்கின்றேன் மஹிந்த வந்தால் அஸ்வரது வீட்டுக்கும் கிரீஸ் மனிதன் வருவான் என்பதை மறந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் மஹிந்தவுடன் சுற்றித் திரிகின்றார். இப்படியானவர்களை எங்கு கொண்டு நிறுத்துவது என்றும், நான் அவ்வாறு கூறப்போவதில்லை. அன்றும், இன்றும், என்றும் ஒரே ஆசாத் சாலிதான். எவ்வாரான கஷ்டங்கள் வந்தாலும் முஸ்லிம் உம்மத்துக்காக நாங்களே முன்வருவோம் என்றும் தெரிவித்தார். இன்று முஸ்லிம்களின் தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருப்போர் மக்களின் வாக்குகளைப்பெற்றுக் கொண்டு மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு  தலைவர்கள் மட்டும் சுகபோகம் அனுபவிப்பதாகவும் இவ்வாறான தலைவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
எதிர்வரும் 17 ம்திகதி சண்டியர்கள் அவர்கள் இல்லை அன்றைய தினம் நீங்கள் தான் சண்டியர்கள் என்றும் கூறினார்.
தான் பாரிய அபிவிருத்திகளை செய்ததாக தம்பட்டம் அடிக்கும் மஹிந்த அவரை தெரிவு செய்த அவரது சொந்த கிராம மக்களே குடிக்க தண்ணீா இன்றி கஷ்டப்படுகின்றனர்.
கப்பல் போகாத துறைமுகத்தையும், விமானம் பறக்காத விமான நிலையத்தையும்,  மக்களுக்குப் பயன்படாத கட்டிடங்களையும் மட்டுமே கட்டியதன் ஊடாகவும் அதற்கு தனது பெயரினை இட்டு அழகு பார்த்ததையும் தவிர அவர் ஒன்று செய்வில்லை.
மைத்திரிபால சிறிசேன அவர்கள் வென்று விடுவார் தாங்கள் தனிமைப்பட்டு விடுவோம் எனப் பயந்த றவூப் நானா தபால் மூல வாக்களிப்பும் முடிந்த பின்பே வந்து சேர்ந்ததாகவும் அது வரை மஹிந்தவின் சாரத்திற்குள் இருந்தார். இப்போதும் ஐக்கிய தேசியக்கட்சியே வெல்லும் என்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்துள்ளதாகவும் 22க்கு மேல் இருக்கவேண்டிய முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 15 அளவில் குறையும் ஆபத்து இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
நம்மிடையேயுள்ள இரண்டு சிறிய கட்சிகளும் ஐக்கியதேசியக் கட்சியுடனேயே இணைந்து போட்டியிடுகின்றார்கள் என்று தெரிவித்த ஆஸாத் சாலி, அதற்குள் முப்பது ஆயிரம் வாக்குகளே உள்ள வன்னிக்குச் சென்றும் மட்டக்களப்புக்கு வந்தும் றிசாத்தையும் அமீர் அலியையும் இல்லாமல் ஆக்க முயச்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.  அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊருக்கு ஏற்ற வகையில் தேசியப் பட்டியல் என்றும் மக்களை குழப்பித் திரிகின்றார். எனவேதான் வாக்காளர்கலே எதிர்வரும் தேர்தலில் இவ்வாரானவர்களை இனங்கண்டு சரியான பாடம் புகட்ட வேண்டும். உங்களது வாக்குகளை அள்ளிக் கொண்டு போய் அவர்கள் சுக போகங்களை அனுபவித்து வருகின்றார்கள்.  என்றும் கூறினார்.
சாத்திரக்காரனின்  கதையில் ஏமாந்த மகிந்த அவரது தலையில் அவரே மண்னை வாரிப்போட்டுள்ளதாகவும் பள்ளிவாசல்கள் மீது எப்போது அவர் கைவைத்தாரோ அன்றே அவரது முடிவுகாலம் ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்கும், எதிர்கால சந்ததிகளுக்கு நமது இலங்கையை சிறந்த முறையில் கையளிக்க விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் ஐக்கிய தேசியக்கட்சியையே ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆஸாத் சாலி, ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் சிறந்தவர்களை ஆதரிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் ஐ.தே.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளவருமான தயாகமகே மற்றுமொரு வேட்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை ஆகியோருடன் மற்றும் ஊர் பிரமுகாகளும் கலந்து கொண்டனர்.
யு.கே.காலித்தீன்
Thayagamaga
razaq

sanathiral 1


Post a Comment

0 Comments