மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இருந்து 3. 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேக்கரும்பு என்ற பகுதியில் சற்றைக்கு முன்பு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்., துணை தலைவர் ராகுல் , மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையாநாயுடு , மனோகர் பாரிக்கர் , மேகலாயா கவர்னர் சண்முகநாதன், மாநில முதல்வர்கள் சித்தராமையா ( கர்நாடகா), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) , உம்மன்சாண்டி (கேரளா), கேரள கவர்னர் சதாசிவம், கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன், குலாம் நபி ஆசாத், எடியூரப்பா, குமாரசாமி, மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் திரண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக இன்று காலை 9.45 மணியளவில் அவரது உடல் வீட்டில் இருந்து பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் ஊர்வலமாக பேக்கரும்பு என்ற பகுதிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது.
அங்கு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கிட முழு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது இறுதிச்சடங்கில் சுமார் 3. 5 லட்சம் பேர் அளவில் கலந்து கொண்டனர்.
கலாம் இறுதிச்சடங்கு நடந்த மைதானத்திற்குள் வி.ஐ.பி.,க்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் இறுதிச்சடங்கை நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படவில்லை.


0 Comments