பாதாள உலகக் குழுக்கள் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுக்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
புளுமெண்டல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு செயலகத்திற்கு கடந்த அரசாங்கம் தொடர்பில் 285 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் 177 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பில் 115 முறைப்பாடுகளும், லஞ்சம் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் 35 முறைப்பாடுகளும், குற்றச் செயல்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.


0 Comments