Subscribe Us

header ads

புகைப்பிடித்ததற்கு இணையாக உயிர்பலி வாங்கும் உடல் பருமன்



குண்டாக இருப்பவர்களை ‘கள்ளமில்லாமல் வளர்ந்தவர்கள்’ என நாம் ஆசையாக ஏற்றுக்கொண்டாலும், தவறான உணவு பழக்கங்கள் மற்றும் சோம்பேறித்தனத்தால் உடல் எடை அதிகரிப்பது புகைப்பிடிப்பதற்கு ஈடான உயிர்கொல்லியாக உருமாறிவருகிறது என்பது சோகமான உண்மை.

இங்கிலாந்தில் உயிரிழப்பவர்களில் 6 பேருக்கு ஒருவர் அதிக உடல் பருமன் பிரச்சனையால் இறப்பதாக அந்நாட்டில் சமீபத்தில் நிகழ்ந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இது அங்கே புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கு சமம்.

கடந்த 2012- ஆம் ஆண்டு வரை 15.9 மில்லியன் மக்கள் வாரத்துக்கு ஒருமுறையாவது ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், விளையாடுவோர் எண்ணிக்கை இந்த சமீபத்திய ஆய்வுப்படி, 15.5 மில்லியனாக குறைந்துள்ளது. 

இந்த இறப்பு விகித்தத்துக்கு ஒரு வாரகாலத்தில் அரைமணி நேரம்கூட உடற்பயிற்சி செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பதுதான் முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒழுங்கான உடற்பயிற்சியினால் புற்றுநோய், இதய நோய்கள், முதுமையால் ஏற்படும் மறதி, மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உட்பட பல நோய்களின் பாதிப்பும் குறையும் வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளது.

Post a Comment

0 Comments