Subscribe Us

header ads

ரஷ்ய பெண்ணின் வயிற்றில் ஆபரேஷனின் போது வைத்து தைக்கப்பட்ட கத்திரிக்கோல் 3 ஆண்டுகளுக்குப் பின் நீக்கம்...



பம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவதுபோல அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் கத்திக்கோல் வைத்து தையலிட்ட ரஷ்ய மருத்துவமனை.

ரஷ்யா நாட்டில் ஐசினா ஸிண்டுசோவா என்ற பெண் சிசேரியனுக்காக மருத்துவமனையில் கடந்த 2012-ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு குழந்தை பிறப்புக்கு பின் அவ்வப்போது வயிறு மற்றும் முதுகில் பயங்கர வலி ஏற்பட்டு வந்தது.

கடுமையான வலியால் தவித்து வந்த அவருக்கு உடல் எடையும் சட்டென குறையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் தனது வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே செய்ய முடிவெடுத்தார் ஐசினா.

அவரது வயிற்றில், சுமார் 8 அங்குலத்தில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திரிக்கோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கத்தரிகோல் வைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சையில் மருத்துவர்களால் தற்போது நீக்கப்பட்டது.

ஐசினா, வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்து தன்னை பெரும் அவதிக்குள்ளாக்கிய அந்நாட்டின் உஃபா நகர மருத்துவமனையின் மீது வழக்கு தொடுக்க உள்ளார்.

Post a Comment

0 Comments