Subscribe Us

header ads

குடும்பம், குழந்தை, கல்வி அனைத்தையும் சரியாக கையாண்டு முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவி...



மேற்கத்திய நாடுகள் பொதுவாக பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதாக எட்டியிருந்து பார்க்கும் நமக்கு தோன்றும். ஆம், ஆணும், பெண்ணும் அங்கே சமம்தான். ஆண்களுக்கு இணையாக பெண்கள் உழைத்தால் மட்டுமே தம்மைக் காத்துக்கொள்ள முடியும். அந்த சமூகம் தனிநபர் சார்ந்தது. அவரவர் வேலையை தானே செய்துகொள்ள வேண்டும்.

ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்தீன் நகரின் ராபர்ட் கோர்டென் பல்கலைக்கழகத்தில் நிறுவன மேலாண்மை படிக்கத்தொடங்கியபோது ஆவா சிம்(23) என்பவர் கர்ப்பம் ஆனார். மாணவி கர்ப்பமாவது பற்றியெல்லாம் கல்லூரிகளுக்கு கவலை இல்லை. பெண்கள் கர்ப்பகாலத்தில், அதிகபட்சம் 2 மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம், அவ்வளவுதான். 

ஆவா தனது கல்லூரிக்கு, குழந்தை பிறந்த அடுத்த மாதம் முதல் குழந்தையுடன் வகுப்புக்கு வந்து பயிலத்தொடங்கினார்.  அவர் படிப்பின் ஆராய்ச்சிக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் வேலையும் செய்து வந்தார். அதுதவிர, ஒரு பகுதி நேர வேலை, குழந்தை, வீடு மற்றும் படிப்பு என அனைத்தையும் முறையாக கையாண்டு தான் நினைத்தபடியே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சமீபத்தில் பட்டம் பெற்றுள்ளார் ஆவா.

இத்தனைக்கும் இடையிலும், அவர் தனது பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட போட்டியிலும் பங்கேற்றிருக்கிறார். தற்போது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பம் தரித்துள்ள அவர், மேற்கொண்டு தனது மேற்படிப்பை குழந்தை பிறப்புக்கு பிறகு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

முதல்முறை கர்ப்பமானபோதே எவ்விதத்திலும் அது தனது படிப்பை பாதிக்கக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டதாக ஆவா குறிப்பிட்டார். இப்படி பொறுப்பாக தனது வாழ்க்கையை கையாளும் ஆவா உள்ளூரில் எல்லோராலும் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments