1492 : ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனடா சரணடைந்தது.1757 : இந்தியாவின் ல்கத்தா நகரை பிரிட்டன் கைப்பற்றியது.
1782) கண்டி இராச்சியத்தின் இரண்டாவது நாயக்க வம்ச மன்னரான கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் இறந்தார்.
1793 : ரஷ்யாவும் பிரஸ்யாவும் (தற்போதைய ஜேர்மனியின் ஒரு பிராந்தியம்) போலந்தை பங்கிட்டன.
1893 : வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
1905 : ரஷ்யக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர்.
1921 : ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதால் 244 பேர் கொல்லப்பட்டனர்.
1941 : இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் வேல்ஸில் லாண்டாஃப் தேவாலயம் ஜெர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.
1942 : இரண்டாம் உலகப் போரில் பிலிப்பைன்ஸின் மணிலா நகரம் ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.
1955 : பனாமாவின் ஜனாதிபதி ஜோசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.
1959 : சந்திரமண்டல ஆய்வுத்திட்டத்தின் முதலாவது செய்மதியான லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1971 : கிளாஸ்கோவில் கால்பந்தாட்ட மைதானம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டனர்.
1982 : சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.
1999 : விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் கொல்லப்பட்டனர்.
2006 : மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
2006: அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் சுரங்கமொன்றில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் பலியாகினர்.
2008 : விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

0 Comments