பேருவளை சீனங் கோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுன தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளரும் களுத்துரை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சி முதன்மை வேட்பாளருமான ஞானசார தேரரை முஸ்லிம்கள் சுற்றிவளைப்பு செய்தாக சில சிங்கள இனையதளங்கள் ”பிரேக்கிங் நியுஸ்” செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்தியில் அளுத்கம பிரதேசத்தில் நேற்று ஞானசார தேரரை சுமார் ஐநூறு முஸ்லிம்கள் சுற்றிவளைப்பு செய்தாகவும் அவர்களால் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் இருந்தாகவும் போலீசார் மற்றும் விஷேட அதிரடிப்படை தலையிட்டு ஞான சார தேரரை பாதுகாப்பாக மீட்டதாக சில சிங்கள இனையதளங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
குறித்த செய்தி பொதுபல சேனா அமைப்புக்கு சார்பான ஆயிரக்கணக்கானவர்கள் தொடரும் முகநூல் பக்கங்களிலும் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments