Subscribe Us

header ads

பொறாமை: தனது பேரனை விட அழகாக, புத்திசாலியாக இருந்ததால் பக்கத்து வீட்டு சிறுவனை கொன்று, புதைத்த பாட்டி...



‘தாய்மை குழந்தைகளிடம் வேறுபாடு காட்டாது’, என உலகமே தாய்மையைக் கொண்டாடிவரும் வேளையில்.. இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, பேரனையும் பார்த்துவிட்ட ஒரு மூதாட்டி, பொறாமையால் பக்கத்து வீட்டுச் சிறுவனைக் கொன்றிருக்கும் சம்பவம் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய சீனாவின் ஹேனன் மாகாணத்தில் உள்ள ஹாவ் கிராமத்தில், மிங்கன் என்கிற ஐந்து வயது சிறுவன் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரெனக் காணாமல் போனான். அவனது ஷூ மட்டும் வாசலில் கிடந்தது, பேரன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவனது பாட்டி, உடனடியாக போலீசாரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். 

குழந்தைகளை கடத்தும் கும்பல் ஏதேனும் அந்தச் சிறுவனைப் பரிமாற்றம் செய்கிறதா? என சுமார் மூன்று வாரங்களாக போலீசார் கண்காணித்து வந்தனர். எனினும், அவ்வாறு ஏதும் நடக்காததால், அச்சிறுவனின் வீட்டுக்கு அருகாமையில் இருந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். 

அப்போது, ஒரு வீட்டில் சரியாக மூடப்படாத ஒரு பள்ளம் போலீசாரின் பார்வையை உறுத்தியது. சந்தேகப்பட்டு, அந்தப் பள்ளத்தைத் தோண்டியபோது, சிறுவன் மிங்கன் அதில் புதைக்கப்பட்டிருக்கப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த வீட்டில் வசித்துவரும் மூதாட்டி கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்தபோது, தனது பேரன் தொடர்ச்சியான வியாதிகளால் அவதிப்பட்டு வந்தான், இதனால் ஓடி, ஆடி விளையாடுவதோ, குறும்பாக எதையும் செய்ததில்லை. 

இந்நிலையில், பக்கத்துவீட்டு சிறுவனான மிங்கன், துறுதுறுவெனவும், அழகாகவும், புத்திசாலித்தனமாகவும் பேசிப் பழகி வந்தது எனக்கு மனவலியை ஏற்படுத்தியது. எனவே, அவனை கொலை செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு பள்ளம் தோண்டி, அவனைப் பிடித்து பைக்குள் அடைத்து, கொன்று, இந்த பள்ளத்தில் போட்டு புதைத்து விட்டேன் என அவர் வாக்குமூலம் அளித்தார். 

அழகாக இருக்கும் மலரை செடியிலிருந்து பிரித்து தலையில் சூடிக்கொள்ள நினைத்தால் அது பாழாய்த்தான் போகும்! உலகில் இருக்கும் அனைத்து பொருட்கள் மீதும் நமக்கு உரிமையில்லை, என்பதை அறிந்திருக்கும் நாம், நமக்கு வாய்த்ததை மட்டும் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டாலே போதும். எந்த நிலையிலும் நமது வாழ்க்கை இனிமையாக இருக்கும்! எப்போதுதான் இதை உணர்வார்களோ?

Post a Comment

0 Comments