இது கிரிக்கட் தொடர்பான பதிவு இல்லை, ஆனால் உள்ளத்தை நெகிழ வைத்த ஓர் பதிவு உங்களால் உதவமுடியாது விட்டாலும் ஒரு Share பண்ணுங்கள் உதவக்கூடிய உள்ளங்கள் உதவட்டும்!
பலதரப்பட்ட மக்கள் மத்தியில் பல்வேறுவகையான நோயாளிகளாக பலரும் இருக்கின்ற போதும் அவர்களுள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒருகுடும்பத்தை நேற்றுக்காலை அவர்களது வீடு சென்று சந்தித்தேன்.
RDS வீதி,மிச்நகரில் இரட்டையர்கள் என்று சொல்லப்படும் சேஹு ஹாஜியின் காணிக்குள் இருக்கிறார்கள்.
தாய், மூத்தம்மா, 14 வயது நிரம்பிய நோயாளியான மகள்.இம்மூன்று பேரும் சிறிய ஓலைக்குடிசைக்குள் முடங்கிக்கிடப்பதைப் பார்த்து கண்ணீரை அடக்கிக்கொண்டு, அவர்களுடன் பேசினேன்.
நோயாளியான மகளின் பிறந்தநாள் இன்று என்று அங்கு சென்றபின் தெரியவந்தது..
05-08-2001 அன்று பிறந்த கமால்தீன் பாத்திமா நில்பா என்ற மகளுக்கு ஒரு வயதின் பின்னர் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கை, கால்கள் செயலற்றுப்போய் படுத்தபடுக்கையாகிவிட்டார் என்றும், அதன்பின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் எனது மகளை காட்டினேன்.
லங்கா ஹொஸ்பிடல், கொழும்பு சென்றல் ஹொஸ்பிடல் எல்லாம் காட்டி சத்திரசிகிச்சை செய்தும் இதுவரையிலும் குணமடையவேயில்லை.
தற்போது எனது மகளுக்கு 14 வயதாகிவிட்டது.தொடர்ந்து கிளினிக் வரச்சொன்னார்கள்.வசதிக்குறை வினால் செல்ல முடியவில்லை.
எனது மகள் பிறந்தவுடன், கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
நானும் வயது சென்ற எனது தாயும்தான் மகளை பார்த்து வருகிறோம்.
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்குக்கூட ஆட்டோவுக்கு கொடுக்க பணமில்லாமல் இருக்கிறோம்.
எங்களது பசியைப்போக்க தினமும் வீட்டு வேலைகளுக்கு அல்லது வைத்தியசாலைகளில் நோயாளிகளை சம்பளத்துக்கு பார்க்க செல்வேன் என்று பாத்திமா நில்பாவின் தாயார் கண்ணீர் மல்க தெரிவிததார்.
இவர்களுக்கு எப்படி உதவலாம் சகோதரர்களே???
இதன்பின் இன்னுமொரு நோயாளியை பதிவிட இருக்கிறேன்.
குறிப்பு
-----------
மேற்படி நோயாளியான பெண் பிள்ளைக்கு உதவ விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடுங்கள்.முறையாக உதவக்கூடியதாக இருக்கும்.
MSM.NASIR,ACA.SALAM, AMANA BANK,ERAVUR A/C; 0110186538001
0 Comments