-Post Media-
ஹெவாஹெட்ட தொகுதி 10 முஸ்லிம் கிராமங்களின் சமூக ஆர்வலர்கள்
மற்றும் ஐ தே க அமைப்புகளின் தீவிர உறுப்பினர்களின் சந்திப்பு அமைச்சர் M H A
ஹலீம் அவர்களின் காரியாலத்தில் நடைபெற்றபொழுது இன்ஷா அல்லாஹ் கண்டியில் அமைச்சர் ஹலீம்
முதன்மை வேற்பாளராக வெற்றியீட்டுவதற்கு ஹெவாஹெட்ட தொகுதி முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் நிச்சயம் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர்கள் சிலர்
பேசுகையில் அமைச்சர் அல்ஹாஜ் கலாநிதி A C S ஹமீது அவர்கள் கண்டியை
பிரதிநிதிப்படுத்திய காலம்தொட்டு அதற்கு பின்னர் பிரதிநித்துவம் செய்த அல்ஹாஜ் M H
A ஹலீம் அவர்களுடைய காலத்திலும் ஹெவஹெட்ட தொகுதியில் நடைபெற்ற கல்வி
சம்பந்தமாகவும் சுகாதாரம் சம்பந்தமாகவும் நடைபெற்ற அபிவிருத்திகளை நினைவு
கூர்ந்தனர். ஆசிரியர் தாவூத் பேசுகையில் ஜனாப் ஹமீது அவர்களின் முற்சியால் எனசல்கொள்ள
மத்திய மத்திய கல்லூரியை தரம் உயர்த்தியது மட்டுமல்லாமல் அதன் இலவச வகுப்புகளை
முன்னெடுத்து செய்ததனையும் பல கல்வி அபிவிருத்திகள் செய்தவைகளையும் நினைவு கூர்ந்தார். அமைச்சர் ஹலீம் மாகான
சுகாதார அமைச்சராக இருந்த பொழுது வைத்திய நிலையங்கள் நிறுவியதையும் முஸ்லிம்
பாடசாலைகளின் அபிவிருத்திக்கு சம்பந்தமாக செயல்பட்டதையும் நினைவு கூர்ந்தனர்.
கடந்த 30 வருடங்கள் கட்சியின் அனுதாபிகளுடன் கூடவே இருந்து
பதவிகளுக்கும் மற்ற வரப்பிரசாதங்களுக்கும்
அவர்களை விட்டு ஒரு பொழுதும் போக மாட்டார்
என்ற நம்பிக்கை பூரணமாக் உண்டு என்பதனையும் சமூமளித்த மக்கள் நம்பிக்கை
தெரிவித்தனர்.
0 Comments