Subscribe Us

header ads

வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு தமிழ் மக்கள் இன்று ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தினை ஆதரிக்க முன்வந்துள்ளதானது

-Irshard Rahumathullah-


வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு தமிழ் மக்கள் இன்று ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தினை ஆதரிக்க முன்வந்துள்ளதானது அவர்கள் வாழ்வில் புதியதொரு அத்தியாயத்தை ஏற்படுத்தும் என வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் அப்துல் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வங்காளையில் நேற்று இரவு இடம் பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாணைச் சின்னத்தில் 9 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ராஜன் மார்க் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்திற்கு முன்னாள் மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் ஆர்பல் ரெவல் தலைமை தாங்கினார்.

மேலும் அமைச்சரும் முதலாம் இலக்க வேட்பாளரு றிசாத் பதியுதீன் மேலும் இங்கு உரையாற்றும் போது –

வங்காளை என்பது கற்ற பலரை உயர் பதவியில் அமரச் செய்த பிரதேசமாகும்.ஆனால் இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள்,அரசியல்வாதிகள்.நீங்களும் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து வாக்களித்து வந்துள்ளீர்கள்,இதன் மூலம் இந்த மக்கள்  எதனை அனுபவித்து வந்துள்ளீர்கள் என கேட்க விரும்புகின்றேன்.

இந்த மன்னார் மாவட்டத்தில் பிறந்த நான் .உங்களுக்கு பணியாற்ற வருகின்ற போது எதற்காக என்னை இனவாத கண்களால் பார்க்கின்றீர்கள் என்று தெரியாது,என்னை ஒர இனவாதியாக காட்டுவதன் மூலம் தமது வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நற்பாசையில் கட்சிகள் செயற்பட்டுவந்துள்ளன.

இனிமேலும் இந்த இனவாத கட்சிகளினை நம்பி உங்களது எதிர்காலத்தினை கையளிக்க முடியாது.அதற்கான மாற்றத்திற்காக நாம் அனைவரும் இன்று ஒன்றுபட்டுள்ளோம்.வங்காலை மக்களும் அந்த பயணத்தில் இணைந்தவிட்டீர்கள் என்பதை இங்கு வந்துள்ள மக்கள் வெள்ளத்தினை பார்க்கின்ற போது புரிந்து கொள்ளமுடிகின்றது.

மீனவர்களுக்கு எவ்வளவோ பிரச்சினைவுள்ளது.அதனை தீர்ப்பதற்கு நல்லதொரு தலைவராக இந்த மார்க் ராஜனை பார்க்கின்றேன்.அவரது கரத்தை நீங்கள் பலப்படுத்துங்கள்,அவருடன் சேர்ந்து நாங்கள் அபிவிருத்திகளை இங்கு கொண்டுவருகின்றோம்.

இந்த அரிப்புத்துறைக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க அன்று நான் வந்தேன்,அப்போது இந்த பிரதேசம் இரந்த நிலையினை விட .இன்று எவ்வாறு இருக்கின்றது.இந்த அபிவிருத்திகள் மூலம் பிரதேசம் பல் துறைகளிலும் முன்னேற்றம் அடையும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.




Post a Comment

0 Comments