Subscribe Us

header ads

இளைஞர்.யுவதிகளின் தொழில் வாய்ப்பினை உறுதி செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் எடுக்கப்படும்

-Irshard Rahumathullah-

இளைஞர்.யுவதிகளின் தொழில் வாய்ப்பினை உறுதி செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்று வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் சிலாவத்துறையில் நேற்று தெரிவித்தார்.

இறுதி தேர்தல் பரப்புரையின் போது அவர் மேலும் தெரிவிக்கையில். –

தமிழர்களும்,முஸ்லிம்களும் வடபுல மண்ணில் ஒற்றுமையாக வாழ்வதற்கு நாம இட்டுவரும் ,அடி்ததளத்தினை தகர்ப்பதற்கு விஷமிகள் செயற்படுகின்றனர்.அவர்கள் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் என்ன என்று நீங்கள் பாருங்கள்,மாந்தையில் உள்ள தமிழ் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தது,அவர்களுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்கியது,பிரதேசத்தில் பாதைகள்,பாடசாலை கட்டிடங்கள்,மின்சாரம் வழங்கியமை உள்ளிட இன்னோரன்ன பணிகளுக்காக இதுமட்டுமல்ல இந்த மக்களுக்கு இதனை பெற்றுக் கொடுக்க எம்முடன் இணைந்து செயற்படும் தமிழ் சகோதரர்களை துரோகிகள் என்று இந்த நல்ல பணியினை செய்பவர்கள் துரோகிகளா ? இதனை தடுபவர்கள் துரோகிககளா ? என கேட்கவிரும்புகின்றேன்.

இந்த முசலியில் இருந்து பாராளுமன்றம் நாம் கொண்டு சென்ற ஒருவர் இருக்கின்றார்.அவரது வேளை என்ன கடந்த 1 வருடமும்,3 மாதங்களுமாக செய்வதெல்லாம் மஹா ராஜாவுக்கு சேவகம் செய்வுத தான்,இவரை வைத்து அந்த மஹா ராஜா வேலைவாங்குவதும் தான்,அறிவிலிகள் கூட தமது சமூகத்திற்கு இழைக்கபடுகின்ற அநியாயத்தை கண்டு அதற்கு எதிராக செயற்பாடுவார்,ஆனால் இங்குள்ள மஹா ராஜா இந்த மக்களை காட்டிக் கொடுத்து,அவர்களை அவமானப்படுத்தும் வேலையினை செய்கின்றார்.என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்






Post a Comment

0 Comments