Subscribe Us

header ads

மயிலின் வெற்றி மஹிந்தவின் வெற்றியினைச் சாதகமாக்கும் (பாகம் - 01)...!!



கடந்த காலத் தேர்தல் முடிவுகளினை வைத்து நாம் இத் தேர்தல் கணிப்பீட்டினை மேற்கொண்டு பார்க்கும் போது மயிலிற்கு அளிக்கப்படும் வாக்குகள் வெற்றிலையினை திகாமடுல்லவில் வெற்றி பெறச் செய்யும் என்பதில் எது வித ஐயமுமில்லை.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி அணியினர் 233,360 வாக்குகளினையும் மகிந்த அணியினர் 121,027 வாக்குகளினையும் பெற்றிருந்தனர்.இதில் மைத்திரிக்கு அளிக்கப்பட வாக்குகளில் இருந்து த.தே.கூ,ஜே.வி.பி,அ.இ.ம.கா ஆகியவற்றின் வாக்குகளினை கழிக்கும் போது ஐ.தே.க அம்பாறையில் பெறச் சாத்தியமான வாக்குகளினைப் பெறலாம்.மைத்திரி பெற்ற வாக்கில் இருந்து த.தே.கூ ஆகியவற்றின் வாக்குகளினை கணிப்பிட கடந்த மாகாண சபைத் தேர்தல் முடிவினை எடுத்து ஆராய்வோம்.

த.தே.கூ கடந்த மாகாண சபைத் தேர்தலில் 44,749 வாக்குகளினைப் பெற்றிருந்தது.மாகாண சபைத் தேர்தலினை விட கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 11.39 வீதத்தினாலும் ,செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 30.14 வீதத்தினாலும்,செல்லுபடியான வாக்கு வீதம் 5.01 வீதத்தினாலும் அதிகரித்து இருந்தது.எனவே,கடந்த மாகாண சபைத் தேர்தலினை விட கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தலம்பல் அற்ற வாக்கு வங்கி 46.44 (11.39+30.14+5.01) வீதத்தினால் அதிகரிக்கும்.இதன் படி பார்க்கும் போது த.தே.கூ 65 530 வாக்குகள் மைத்திரி அணியின் வாக்கில் உள்ளடங்கியுள்ளதனை அறிந்து கொள்ளலாம்.(தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கி தளம்பல் இல்லாமல் இருப்பதால் கடந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுடன் கணிப்பிட்டு பெறுதலில் அவ்வளவு மாற்றம் ஏற்படாது)

மைத்திரி அணியினர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்கில் இருந்து த.தே.கூவின் வாக்குகளினை கழித்தால் 167 830 வாக்குகள் எஞ்சும்.இவ் வாக்கு எண்ணிகையிலேயே மயிலின் வாக்குகளும் உள்ளடங்கியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிலை 121 027 வாக்கினைப் பெற்றிருந்தது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி அணிக்கு த.தே.கூவிற்கு உரித்தான 65 530 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.மு.கா,அ.இ.ம.கா,ஐ.தே.க ஆகிய மூன்று கட்சிகளின் வாக்குகள் 167 830 உள்ளன.கடந்த மாகாண சபைத் தேர்தலில் 2.16 வீத வாக்குகள் சிறு சிறு கட்சிகளிடையே சிதறச் செய்யப்பட்டிருந்தது (ஜே.வி.பியின் வாக்கு எண்ணிக்கையும் இவ் வீதத்தினுள் உள்ளடங்குகிறது.).இம் முறை ஜே.வி.பியின் வாக்கு எண்ணிகையில் சிறிய அதிகரிப்பை எதிர்ப்பார்பதனால் இம்முறை மூன்று வீத வாக்கதிகரிப்பு ஏற்படும் எனக் கொள்ளலாம்.இதன் படி மூன்று கட்சிகளிடையே இவ் வாக்கு சரியாக பிரிகிறது எனக் கொண்டு மூன்று பிரதான கட்சிகளிடையே இருந்து ஒரு சதவீத வாக்கினை கழிப்போம்.இதன் படி வெற்றிலை 119 816 வாக்கினையும்,த.தே.கூ வாக்கினையும் 65 874, மு.கா,அ.இ.ம.கா,ஐ.தே.க ஆகிய மூன்று கட்சிகளும் 166151 வாக்கினையும் பெறும்.

பொதுத் தேர்தல் வாக்களிப்பு வீதம் பொதுவாக 65 வீதம் அளவில் காணப்படும்.இத் தேர்தலில் அளிக்கபடச் சாத்தியமான வாக்கினை கணிப்பிட மேலுள்ள கட்சி வாக்குகளினை 65 வீதம் வாக்களிப்படும் போது எத்தனை வாக்குகள் பெறும் எனக் கணிப்போம்.இம் முறை மிக மந்தகதியில் வாக்களிப்பு இடம் பெறும் என பலரும் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.இதன் போது வெற்றிலை 100633 வாக்கினையும் ,த.தே.கூ 55 327 வாக்கினையும் ,மு.கா,அ.இ.ம.கா,ஐ.தே.க ஆகிய மூன்று கட்சிகளும் 139 550 வாக்கினையும் பெறும்.

அம்பாறை மாவட்டத்தினை பொறுத்த மட்டில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் வாக்குகள் மஹிந்த அணியினருக்கு மிக அரிதாக அளிக்கப்பட்டது.கடந்த ஜனாதிபதித் தேர்தலினை விட அதாவுல்லாஹ்வின் தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக 15000 அளவிலான வாக்குகள் வெற்றிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது.மேலும்,தயாரத்னயின் மாற்றத்தினால் வெற்றிலையின் ஐயாயிரம் வாக்குகள் ஐ.தே,கவிற்கு செல்ல வாய்ப்புள்ளது.தயாரத்னயின் மாற்றம் வெற்றிலையின் வாக்கு வங்கியில் அவ்வளவு மாற்றத்தினை ஏற்படுத்தியதாக அறிய முடியவில்லை.எனவே,கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிலை பெற்றுக் கொண்ட வாக்குகளினை விட 10000 அளவிலான வாக்குகள் வெற்றிலைக்கு அதிகரிக்கும் எனும் வேளை ஐ,தே.காவின் வாக்குகள் இதே அளவில் குறைவடையும்.

இதன் படி பார்க்கும் போதும் 110 633 வாக்கினையும் ,த.தே.கூ 55 327 வாக்கினையும் ,மு.கா,அ.இ.ம.கா,ஐ.தே.க ஆகிய மூன்று கட்சிகளும் 129 550 வாக்கினையும் பெறும்.எமது கணிப்பீடுகள் அனைத்தும் கடந்த ஜனாதிபதித் தேர்தலினை மையாமாக கொண்டு இருப்பதால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 65 சத வீதம் வாக்களிக்கப்பட்டிருந்தால் 300531 வாக்குகள் வரும்.இதில் ஆசனம் பெற தகுதியான கட்சியினுள் உள்ளடங்க குறைந்தது 15026 (5 சத வீதம்)வாக்குகள் தேவைப்படும்.இந்த வாக்குகளினை அ.இ.ம.கா பெறும் போது 3891 என்ற மிகச் சிறிய வேறு பாடே வெற்றிலை அம்பாறை மாவட்டத்தினை வெற்றி கொள்ள தேவைப்படும்.மயில் 18917 வாக்கிற்கு மேல் பெற்றால் ஐ.தே.க திகாமடுல்ல மாவட்டத்தினை இழப்பதோடு தனது போனஸ் ஆசனம் ஒன்றில் குறைவினைச் எதிர் நோக்கும்.

அம்பாறையில் பேரின வாதம் தலைவிரித்தாடுதல்,ஐ.தே.கவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்கும் என்ற விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளமை,ஐ.தே.க கரையோர மாவட்டத்தினை வழங்கினால் அம்பாறை மாவட்ட மக்கள் புறக்கணிப்பினை சந்திப்பார் போன்ற பல்வேறு காரணிகள் முன் 3891 வாக்கு ஒரு வாக்கே அல்ல. 3891 வாக்கு என்பது ஆசனம் பெற தகுதியான கட்சியினுள் உள்ளடங்கவே.மயில் ஆசனம் பெற்றால் மஹிந்தவின் வெற்றியினை அது சாதகமாகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

மேற் குறிப்பிட்ட கணிப்பீடுகளினை நன்கு அவதானித்தால் மயிலின் வெற்றி மஹிந்தவின் வெற்றியினைச் சாதகமாக்கின்றது என்பதை அறியலாம்.மயில் இதில் ஓர் ஆசனத்தினைப் பெற்றாலும் ஐ.தே.கவின் ஒரு போனஸ் ஆசனத்தினை இழக்கச் செய்ததன் காரணமாக அ.இ.ம.காவிற்கு வழங்கச் சாத்தியமாக உள்ள ஒரு தேசியப் பட்டியலினை இழக்கும்.

தொடரும்....

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Post a Comment

0 Comments