Subscribe Us

புத்தளம் தேர்தல் களம் ஓர் கருத்து…!

புத்தளம் தேர்தல் களம் சூடேரிக்கொண்டிருக்கிறது …

கருத்துக்களால் கல் எரிய வசதியான வீதிகளாய் எம் சமூக வலைத்தளங்கள்… எங்கு பார்த்தாலும் வசை… கண்ணுக்குத்தெரியாத கழுத்தறுப்பு… எல்லாவற்றையுமே தனக்கு சாதகமாய் திருப்ப முயற்சிக்கும் முறிந்த உள்ளங்கள்…

சிலபோது உள்ளத்தின் உறுத்தலையும் மீறி அனுமானங்கள்…. பொய்கள்…

வாசித்து வாசித்து வலிக்கிறது…

இவற்றை விடுத்து பொதுவானவர்களேனும் ஏன் சில நல்ல முன்மொழிவுகள் நோக்கி சிந்திக்கக் கூடாது? என்பதற்காகவே இதனை எழுதுகிறேன்…

சுமார் 40%ம் எம்மவர்கள் வாக்களிக்காதிருக்கின்றார்கள்… கையில் மருந்தோடு மரணிக்கும் சமூகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்…

இவர்கள் மனதுவைத்தாலே போதும் இன்னும் இரண்டு MP க்கள் சாத்தியமாகிவிடும்…

இதுபற்றி யாரும் சிந்திக்கவில்லை என்று நான் கூறவில்லை..

ஆனால், இந்தப் பிரச்சினையின்பால் கொடுத்த முக்கியத்துவமும் முன்னெடுப்புகளும் மிகக்குறைவு என்பதே எனது அவதானமாகும்…

இந்த 2015 தேர்தல் களத்தில் கூட, இப்பிரச்சினை அதற்குரிய உயரத்திற்கு தூக்கப்படவில்லை…

இது பற்றி சில யோசனைகளை நான் முன்வைக்கிறேன் சாத்தியப்பாடுகள் பற்றி நீங்களும் கலந்துரையாடுங்கள்…

1. இனம் காணப்படும் சில பிரதேசங்களில் வாக்களிப்பின் தேவையை மாட்டுமே பேசுபொருளாகக் கொண்ட பிரச்சாரக் கூட்டங்களை நடாத்துதல்.

– ஆட்டோ அறிவிப்புகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாது, தேர்தல் விழிப்புணர்வற்றவர்களை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கும் வரச்செய்யும்/அழைத்துவரும் வேறுபல ஏற்பாடுகளை பற்றி சிந்தித்தல்.

– கட்சி சார் பிரச்சாரக் குழுக் கூட்டங்களில்கூட ஒருவரேனும் விசேடமாக “வாக்களிப்பின்/ வாக்களிக்கச் செய்வதன் முக்கியத்துவம்” பற்றி பேசுமாறு வேண்டுதல். அல்லது பொதுவான ஒருவரை சகல கட்சி மேடைகளிலும் இத்தலைப்பில் பேசும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருதல்.

– நிராகரிக்கப்படும் வாக்குகள் பற்றியும் அதன் வடிவங்கள் பற்றியும் காட்சிப்படுத்திய விளக்கங்களை பொதுமக்களுக்கு வழங்குதல்.. (நிராகரிக்கப்படும் அனைத்து வாக்குகளும் வந்து வழங்கப்பட்ட வாக்குகள் என்பதனை பலபோது நாம் சிந்திப்பதில்லை..!)

– கட்சி சார் தர்கங்களை தவிர்த்து இத்தகு விழிப்புணர்வு உரைகள்/ விளக்கங்களை ஒளி-ஒலிப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து கொள்ளுதல்

– பிரச்சாரப் பிரதேசங்களில் பெண்கள் /சகோதரிகளுக்கான பிரத்தியேக அழைப்பு மட்டும் அமர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்தல்.

2. தனது அன்றாட கூலித்தொழில் மற்றும் நிர்பந்தங்கள் காரணமாக தேர்தல் தினமன்று, வாக்களிக்க நேரமின்றி அல்லது ஊக்குவிப்புகள் இன்றி காலா காலமாய் இருந்துவரும் சமூக அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த நிர்பந்தங்களை களைந்து வாக்களிக்கும் ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொடுத்தல்.

– தொழில் வழங்குனர்களை சந்தித்து, அவர்களது நிறுவனங்களில் ஒரு மணி நேரம் விடுமுறை அல்லது சுழற்சி முறையில் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பதற்கு தங்கள் ஊழியர்களை அனுப்பி வைக்குமாறும் அந்த வாக்களிப்பினை உறுதிப்படுத்துமாறும் வேண்டுதல்.

– Bazar கடை உழியர்கள் – கடை owners பொறுப்பெடுக்கச் செய்தல்

– தோட்டங்களில் வேலை செய்யும் குடும்பங்கள் – estate owners பொறுப்பெடுக்கச் செய்தல்

– Mason வேலை செய்யும் தினக்கூலித் தொழிலாளிகள் – Mason Bass மார் பொறுப்பெடுக்கச் செய்தல்

– வீட்டுப் பணிப்பெண்களை அவ்வீட்டாரே அழைத்துச்சென்று வாக்களிக்கச் செய்தல் பற்றிய ஆலோசனைகள்..
– Etc..

3. குடும்பங்களில் செல்வாக்கு செலுத்தும் உறுப்பினர்கள்/ பிரதானிகள் அழைக்கப்பட்டு, தனது குடும்பங்களில் சகலரையும் வாக்களிக்கச் செய்வதன் தேவை பற்றியும் அதற்கான உத்திகள் பற்றியும் சில கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்.

4. ஊர், வீதிவாரியாக அல்லது பொருத்தமான முறையின் கீழ் முறையாக திட்டமிடப்பட்டு தேர்தல் தினத்தன்று வாக்களிப்பிற்கான போக்குவரத்து / வாகன ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.

5.இறுதி வார விஷேட ஜூம்மாக்களை இத்தலைப்பின் கீழ் நடைமுறை சாத்தியமான வழிகாட்டல்கள் பற்றியதாய் அமத்துக்கொள்ளுதல்.

6. தேர்தலின் முன்தினம் அல்லது அனுமதிக்கப்பட்ட இறுதிப் பிரச்சாரத் தினத்தில், “ஒவ்வொருவரும் வாக்களிப்போம்” என்ற மகுடத்தின் கீழ் பிரதேசம் தழுவிய / சகல வீடுகளையும் சந்திக்ககக் கூடிய – ஒரு முழு நாள் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்தல்.

ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், இளைஞர்கள், புத்தி ஜீவிகள் பலரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும்…

– வயோதிபர்கள் ,

– நோயாளிகள்,

– மாற்றுத்திரனாளிகள் கூட “நாளை நான் வாக்களிப்பேன்” எனக்கூறும் சப்தங்களை

அந்நாள் சந்திப்பதாக அமைய வேண்டும்.இன்னும் சிந்திக்கப் பாடல் வேண்டும்..

இதனை புத்தளம் சிவில் சமூகம் / சமூகத்தலைமைகள் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்…

பொருத்தமெனக் கருதினால் புத்தளம் பெரிய பள்ளி இதற்கான தலைமையை வழங்க முன்வரவேண்டும்…

சில 100 வாக்குகள் இன்மையால் எமது இலக்குகளை இழக்கும் வாய்ப்பு இத்தேர்தலிலும் இடம்பெற இடமுண்டு..

அதனை தவிர்க்க முயற்சிப்போம்…

வேறுபாடுகளை தவிர்த்து,  அசிங்கமான விமர்சனங்களை, தனி நபர் பலவீனங்களை பதிந்து பரபரப்பாக்குவதை தவிர்த்து

சமூக நலனை மையப்படுத்திய விடையங்களை நாம் முன்னுரிமைப் படுத்துவோம், ஏதேனும் செய்ய முயற்சிப்போம்…
 
அல்லாஹ் எமது சமூகத்தை தூய்மைப் படுத்துவானாக.

by Marikkar – puttalam

Post a Comment

0 Comments