Subscribe Us

ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கைகள்


ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கைகள் நன்றாகவே உள்ளது , அதில் மாற்று கருத்து இல்லை...

ஆனால் , பிரதமர் அவர்கள் இந்த தேர்தலின் பின்பு நாடு தழுவிய ரீதியில் 11 தொழில் பேட்டைகள் அமைக்கபடும் என்று சொல்லி உள்ளார்கள்....

நமக்கான தொழில் பேட்டை எங்கு அமைய உள்ளது...?
*நாட்டின் மரக்கறி தேவையில் 60 % தேவையை நான் நிவர்திக்கிறோம்...
*மீன் பிடியிலும், இறால் வளர்ப்பிலும் நமது மாவட்டம் சிறந்து காணப்படுவதோடு அதற்கான புவியியல் ரீதியான அம்சத்தையும் கொண்டுள்ளது...

*உப்பு உற்பத்தியில் சிறந்து விளங்குகிறோம்.... * தெங்கு முக்கோண வலயத்தில் நமது மாவட்டமும் ஒன்று ( கம்பஹா, குருநாகல, புத்தளம்)
*அத்தோடு துறைமுகம் , விமான நிலையம் என்பன பக்கத்தில் அமைந்து உள்ளமை வியாபாரத்திற்கு உகந்ததாய் காணப்படுகிறது...

*காற்று மின்சாரம், அனல் மின்சாரம் போன்றவற்றிற்கு உகந்த இடமாய் அமைந்துள்ளது *சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் காணப்படுகிறது
ஏனைய பகுதியில் உள்ளோர்கள் அவர்களின் வளங்களை பயன்படுத்த முஸ்தீபுகளை மேற்கொள்ளும் போது நம்மவர்கள் அடுத்தவர்களை சொறிவதில் தான் காலம் கடத்துகின்றனர் ..

இத்தனை இருந்தும் நமக்கான ஒரு தொழில் பேட்டைக்கு உத்தரவாதம் இல்லாமல் இருப்பது ஏன்? இது பிரதமரின் தவறு இல்லை , இங்கு இருக்கின்ற அந்த கட்சி சார்ந்தோரின் பொறுப்பற்ற தனமும், அறியாமையும் ஆகும் .


இன்ஷா அல்லாஹ் இந்த தேர்தலின் பின்பு நாம் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி வருகின்ற அரசோடு இவ்வாறான விடயங்களை பேசுவோம்... ஏனெனில் நாம் தேர்தலுக்காய் ஆரம்பமான கூட்டு அல்ல , அதற்கும் மேலே ..
சிந்தித்து உங்கள் வாக்குகளை பதியுங்கள்...


-Infas-

Post a Comment

0 Comments