Subscribe Us

header ads

மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கமொன்று உருவாகும் :ஜனாதிபதி

ஜனவரி 8ஆம் திகதி பெறப்பட்ட வெற்றியும் அதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நன்மைகளையும் வழங்கக்கூடிய புதிய அரசாங்கமொன்று இன்னும் இரண்டு வாரங்களில் உருவாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 6 மாதங்களில் எமது அரசாங்கம் உலகில் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவுகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 
இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு கடந்த ஜனவரி 8ஆம் திகதி எமது மக்கள் 82 சதவீத வாக்குகளை வழங்கியுள்ளனர். 
இதன் மூலம் இந்த நாட்டு மக்களும் புத்திஜீவிகளும் பிரபுத்துவ வர்த்தகர்களும் மாற்றத்தை எதிர்பார்த்தே என்னை ஜனாதிபதியாக்கினீர்கள்.
அந்த எதிர்பார்ப்பை மாற்றத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வேன். இன்னும் இரண்டு வாரங்களில் நட்டில் நடைபெறும் இவ் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏதுவான அரசாங்கம் உருவாகும் என நான் நம்புகின்றேன்.  

Post a Comment

0 Comments