அபு அலா –
![]() |
file picture |
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களையும் ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (09) பி.ப 2.00 மணிக்கு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், தேசிய நீர்வழங்கள், வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான றஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
மேலும், இந்நிகழ்வுக்கு மு.காவின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், பிரதி மேயர் முழக்கம் மஜீட், மாநகர சபை உறுப்பினர்கள், கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கல்விமான்கள், உலமாக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
0 Comments