Subscribe Us

header ads

கவலைப்படாதீர்கள்: சொர்க்கம் ஒரு தேவதையை இழந்து விடவில்லை: இணையத்தைக் கலக்கிய படம் வெறும் கப்சா



சமீபத்தில், வெள்ளை கவுண் அணிந்த வயதான தேவதை ஒருவர், சொர்க்கத்திலிருந்து தவறி விழுந்து, பூமியில் இறந்து கிடந்ததாக இணையத்தில் சில புகைப்படங்கள் பரவியது. பலரும் இதனை உண்மையென நம்பி இஷ்டத்துக்கு ஷேர் செய்தனர். இதனால் இந்த புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. 

ஆனால், இது உண்மையில், சீனாவைச் சேர்ந்த சுன் யுவான் மற்றும் பெங் யு ஆகிய கலைஞர்கள் 2008-ம் ஆண்டு உருவாக்கிய கலைப்படைப்பாகும். ‘ஏஞ்சல்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படைப்பு பீஜிங் நகரில் வைக்கப்பட்டது.

உயிரிழந்த குழந்தைகள், மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு ஆகியவற்றை தங்களின் கலைப்படைப்புகளில் பயன்படுத்தும் வழக்கம் கொண்ட, இந்த சர்ச்சைக்குரிய கலைஞர்கள், மிகவும் தத்ரூபமான கலைப்படைப்புகளை உருவாக்குவதில் வல்லவர்கள்.

இணையத்தில் வைரலான இந்தக் கலைப்படைப்பை சிலிக்கா ஜெல், பைபர் கிளாஸ், துருப்பிடிக்காத இரும்பு ஆகியவற்றைக் கொண்டு இவர்கள் உருவாக்கியுள்ளனர். இனி, இது போன்ற கப்சா புகைப்படங்களை ஷேர் செய்வதற்கு முன்னால் கொஞ்சம் யோசியுங்கள், என்று அறிவுரை கூறுகின்றனர். இணைய அறிவுஜீவிகள்...




Post a Comment

0 Comments