Subscribe Us

header ads

8வது பாராளுமன்றத்திற்கான மக்கள் தீர்ப்பு நாளை! களத்தில் 6,151 வேட்பாளர்கள்! 1,50,44,490 வாக்காளர்கள்!


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் யாரைத் தெரிவு செய்வது என்ற தீர்ப்பை மக்கள் நாளை வழங்கவுள்ளனர்.

சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்த லை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுக ளும் நிறைவடைந்துள்ளதாகவும் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் மக்கள் வாக்களிக்க முடியுமெனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

225 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களில் 196 பிரதிநிதித்துவங்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்காக  6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரம் ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 12ஆயிரத்து 314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 ஆயிரத்து 600 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதோடு 75 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 80 பேரும் தெற்காசிய தேர்தல்கள் முகாமையாளர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த 29 பேரும் ஆசிய தேர்தல்கள் அதிகாரிகள் ஒன்றியத்தைச் சேர்ந்த 3 பேரும் பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த 15 பேரும் ஈடுபடவுள்ளனர்.

அதேவேளை உள்நாட்டைச் சேர்ந்த சுயாதீன தேர்தல் அமைப்புக்களான கபே, பவ்ரல், டிரான்ஸ்பரன்ஸி உட்பட பல்வேறு அமைப்புக்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதுடன் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் மூலம் 29 உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவார்கள். அதனடிப்படையில் 225 பேர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இம்மாவட்டத்திலிருந்து 15,86,598 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 18 உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு 16,37,537 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

 களுத்துறை மாவட்டத்திலிருந்து 10 உறுப்பினர்களை தெரிவுசெய்ய அம்மாவட்டத்தில் 89,7,349 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களை தெரிவு செய்ய 10,49,160 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

மாத்தளை மாவட்டத்தில் 05 உறுப்பினர்களை தெரிவு செய்ய 37,9,675 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்ய 53,4,190 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவு செய்ய 81,9,666 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்ய 62,3,818 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில 07 உறுப்பினர்களை தெரிவு செய்ய 46,2,911 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 07 உறுப்பினர்களை தெரிவு செய்ய 52,9,239 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 06 உறுப்பினர்களை தெரிவு செய்ய 25,3,058 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 உறுப்பினர்களை தெரிவு செய்ய 36,5,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் 07 உறுப்பினர்களை தெரிவு செய்ய 46,5,757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களை தெரிவு செய்ய 29,6,852 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

குருணாகல் மாவட்டத்தில் 15 உறுப்பினர்களை தெரிவு செய்ய 12,66,443 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்ய 55,3,009 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 09 உறுப்பினர்களை தெரிவு செய்ய 63,6,733 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பொலநறுவை மாவட்டத்தில் 05 உறுப்பினர்களை தெரிவு செய்ய 30,7,125 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்ய 62,0,486 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 05 உறுப்பினர்களை தெரிவு செய்ய 33,9,797 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்ய 77,0,042 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 09 உறுப்பினர்களை தெரிவு செய்ய 64,9,878 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments