தேர்தல் சட்டங்களை மீறும் வேட்பாளர்களுக்கு மதிய உணவு காவல் நிலையத்திலும் இரவு உணவு விளக்கமறியலிலும் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் என்பது நாட்டில் அனைவரும் இணைந்து ஒன்றாக கொண்டாட வேண்டிய தேசிய விழா என அவர் கூறினார். எனினும் தேர்தல் சட்டத்தை மீறினால் சட்டம் செயற்படுத்தும் போது எவ்வித மாற்றங்களும் காணப்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதான அரசியல் கட்சிகள் இரண்டின் செயலாளர்கள் மாற்றப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவப்பட்டது, அதற்கு தனது தீர்மானத்தை பொருத்தமான சந்தர்ப்பத்தில் அறிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments