Subscribe Us

header ads

பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்குச் சென்ற மூன்று இளைஞர்கள் வாலினால் வெட்டு!!!


இப்பாமுகவ, பக்மீகொல்ல ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்குச் சென்ற மூன்று இளைஞர்கள் வாலினால் வெட்டப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது இன்னும் மூன்று இளைஞர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறித்த பிரதேசத்தில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் குறித்த இடத்திற்கு இப்பாமுகவ பொலிஸார் வருகை தந்துள்ளடதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..

UPDATE:

பன்னலயில் கடந்த வருடம் பள்ளிவாசலை தாக்கிய அதே குழுவே இன்றும் தாக்குதல் நடத்த்யுள்ளனர்.


இப்பாகமுவ பக்மீகொல்ல பகுதியில் ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று இரவு 9.30 மணி அளவில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்குச் சென்று வந்த இளைஞர்களை வாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தியும் சென்றுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மூன்று இளைஞர்கள் வாள் வெட்டுக் காயத்திற்கு இலக்காகியுள்ளனர். இதில் கடுமையாக தாக்குதலுக்குள்ள இளைஞர் ஒருவர் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் இருவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் டையிலர் சொப் ஒன்றும் மற்றும் வீடு ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. எந்தக் காரணமின்றி இங்கு வருகை தந்த குழுவினர் தாக்குதல் நடத்தி விட்டுச் சென்றுள்ளதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை ஊர் மக்கள் அடையாளம் காட்ட முடியும் எனவும் இவர்கள் கடந்த காலத்தில் பன்னல பள்ளிவாசல் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள். இனப்பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொது மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். தற்போது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-SN

Post a Comment

0 Comments