PPAF இம்முறை இழக்கப்பட்ட பாராளமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் சாத்தியமான வழிமுறைகளை முன்னெடுத்தது. வழமைபோல் பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்குகள் சிதறடிக்கப்படகூடாது என்பதில் மிகக் கவனம் செலுத்தியது. பிரதான கட்சிகளால் புத்தளத்திற்கான பாராளுமன்ற பிரதிநிதியை பெற்று கொடுக்க முடியாது போனது என்பது வரலாறு. இதற்கு தீர்வாக மூன்றாவது சிறுபான்மை சக்தியை உருவாக்குதல் என்ற முடிவில் உறுதியாக இருந்தது. அதற்கான பல முன்னெடுப்புக்களை ஆரம்பித்தது.
SLMC உடன் பேச்சுவார்த்தை, சகோதரர் நவவியுடன் பேச்சுவார்த்தை, சகோதரர் அலி சப்ரியுடன் மற்றும் ACMC உடன் பேச்சுவார்த்தை, மற்றும் கல்பிட்டி தாகிர், இன்பாஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை, புத்தளம் மாவட்ட இந்து சமூக முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை என வெவ்வேறான பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இதனூடாக சிறு சக்திகளை ஒன்றினைத்து அவர்களுடன் PPAF ஒரு கூட்டமைப்பாக செயற்படுவதை முதன்மைபடுத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.
- SLMC: SLMC தனித்து களமிறங்கினால் மரச்சின்னத்தில் போட்டியிடுவோம். அவ்வாறு மரச்சின்னத்தில் போட்டியிடுகின்ற போது அதில் PPAF இணைந்து செயற்படலாம். அலிசப்ரியை மட்டும் இணைத்து கொள்ளலாம், ஆனால் ACMC யை இணைக்க முடியாது. மற்றும் KAB, Yahya வை இணைக்க முடியாது. என்ற நிபந்தனைகள் புத்தளம் SLMC அணியினால் தெளிவாக முன் வைக்கப்பட்டன.
- NAVAVI: SLMC, PPAF பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற காலப்பகுதியில் சகோதரர் நவாவி SLMC யில் இணைந்தார்.
- ALISABRI: அனைவரும் சுயச்சையில் போட்டியிடுவோம். அப்படியென்றால் நான் தயார் மரச்சின்னத்தில் (SLMC) வர முடியாது. அதற்கு எனது ACMC தலைமை அனுமதிக்காது என்பது அவரது இறுதி முடிவாக இருந்தது.
- THAHIR: (மகாண சபை உறுப்பினர்) : எல்லா அரசியல் பிரமுகர்களும் இணைந்தால் நான் தாயார். அனால் இன்னுமொரு கட்சியில் அதாவது SLMC யில் வர முடியாது. அனைவரும் சுயச்சையில் போட்டியிடுவோம் என்பது அவரது நிலைப்பாடு.
- INFAS: – PPAF யில் நேரடியாக இணைந்து கொண்டார்.
- புத்தளம் மாவட்ட இந்து சமூகம் நேரடி அரசியலில் களமிறங்குவது பற்றி பரிசீலனை செய்து கொண்டிருந்தது.
- PPAF: PPAF ஒரு தீர்க்கமான மற்றும் MP யை பெற்றுகொள்ளும் சிறந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அனைவரையும் திருப்திபடுத்த முடியாது அனைவரையும் ஒரு இடத்தில் அணி திரட்ட முடியாது என்பது வரலாற்று உண்மையும் கூட, எனவே MP யை பெற்றுகொள்ளும் சாத்தியமான இரண்டு முடிவுகளை முதன்மை படுத்தியது!
- புத்தளத்தில் SLMC தனித்து போட்டியிட்டால் அதனுடன் PPAF இணைந்து செயற்படுதல்.
- புத்தளத்தில் SLMC தனித்து போட்டியிடாவிட்டால் புத்தளம் SLMC உறுப்பினர்களையும் இணைத்து கொண்டு சுயச்சையில் போட்டியிட விரும்பும் அனைவரையும் இணைத்து கொண்டு களமிரங்குதல்.
பாராளமன்றம் கலைக்கப்படுகின்றது வேட்பு மனு தாக்கல் திகதியும் அறிவிக்கப்படுகின்றது. ( ஜூலை 06 முதல் ஜூலை 13 வரை ) தேசிய அரசியலில் பல காய் நகர்த்தல்கள், எப்பொழுதும் குழப்பமான பரபரப்பான மாற்றங்கள். அது புத்தளத்தையும் விட்டு வைக்கவில்லை.
SLMC யின் இறுதி தீர்மானத்திற்காக PPAF வும் பெரும்பான்மை புத்தளம் தொகுதி சமூகமும் காத்திருந்தது. பல காலகெடுக்கள் (JULY 03, JULY 05, JULY 06), SLMC தேசிய தலைவருடன் பல சந்திப்புக்கள். JULY 06 வரையும் புத்தளத்தில் SLMC தனித்து போட்டியிடாது என்பது உறுதியாகி விட்டது.
PPAF தனது இரண்டாவது நகர்வுக்கு தயாரானது. மீண்டும் SLMC உடன் பேச்சுவார்த்தை ஆரம்பமாகின்றது. SLMC தனித்துமில்லை அதே நேரம் வேட்பாளர்களை UNP யில் களமிரக்கவும் இல்லை எனவே, பொது சுயச்சையில் களமிறங்க SLMC வேட்பாளர்களை PPAF அழைக்கின்றது. அங்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது. முக்கிய SLMC நபர்கள் சுயச்சையில் போட்டியிட முடியாது ஆனால் ஆதரவு தருகிறோம் என்றனர். புத்தளம் SLMC ஆதரவையும் பெற்று கொண்டு சுயச்சையில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்த மற்ற அனைத்து வேட்பாளர்களையும் அழைக்கும் பணியை ஆரம்பித்தது.
Ali Sabri தனது முழு ஆதரவையும் தருவதாகவும் அதில் போட்டியிட முழு விருப்பமும் தெரிவித்தார். அது மட்டுமல்லாது KAB யையும் இணைத்து கொள்வோம்! அவரும் தயாராக உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்ததார். மற்றும் KAB, Thahir, Yahya வும் இதனுடன் இணைவதாக அறிவித்தனர். தொடர்கிறது எதிர்பாராத கூட்டணி அதனை தொடர்ந்து ஒரு பலத்த மக்கள் சக்தி உருவாகும் நிலையை அல்லாஹ்வின் உதவியால் PPAF உருவாக்கிறது. கூட்டணி வலுபெறுகிறது. புத்தளம் தொகுதி UNP க்கு பலத்த சவாலாக மாறுகிறது. 
இப்போது UNP யின் தேசியமட்ட அரசியல் காய் நகர்த்தல்கள் ஆரம்பிக்கின்றன. அதற்காக ரிஷாத் பதியுதீன் முதலில் களமிறங்குகிறார். அவரின் நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது உப்பிட்ட மண்ணுக்கு நன்றி செலுத்த வேண்டும் அல்லவா? அதுதான் அவரது கட்சி அரசியலை புத்தளத்தில் வளர்க்கவும். உருவாகின்ற பலமான புத்தளம் மக்கள் சக்தியை சிதைக்கவும் களமிறங்குகிறார். அதிகாலையில் நவவி வீட்டில் (2 1/2 வருட) தேசிய பட்டியல் ஆசையூட்டபட்டு நவவியை தன்பக்கம் அழைத்து கொண்டார் UNP யில் ACMC சார்பாக போட்டியிடுவதற்கு.
செய்தி அறிந்து நவவி வீட்டுக்குள் அனுமதியோடு உட்புகுந்த PPAF உறுப்பினர்களிடம் நான் எனது கட்சி அரசியலை புத்தளத்தில் செய்யப்போகிறேன் என்றார். 26 வருடங்களுக்கு பின்பு ஒரு ஒற்றுமையான கூட்டணியை உருவாக்கியுள்ளோம். எனவே இதனை குழப்புகின்ற துரோகத்தை செய்ய வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் நவவியின் வீட்டில் இருந்து PPAF உறுப்பினர்கள் வெளியேறினர்.
இரண்டாவது, தேசிய தலைவர் ரவுப் ஹகீம், ரிஷாத் புத்தளத்தில் களமிரக்கியத்தை விடுவாரா? உடனே SLMC வேட்பாளர் FAIROOS ய் தனது கட்சி சார்பாக UNP யில் களமிறக்குகிறார்.
இனி புத்தளத்தின் அரசியல் தலையெழுத்தை (MP கனவை) நாமே தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கின்றோம். என்பது மட்டும் உறுதியாக விளங்கியது. தேசிய கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கும் சுயநல அரசியல்களுக்கு பின்னால் அடிபட்டு செல்லும் கொள்கை அற்ற ஒரு சமுதாயமாகவே உள்ளோம் என்பது கவலையான விடயமே. தேசிய கட்சிகளுக்கு புத்தளம் சமூகத்தின் வாக்கு கருவேப்பில்லை என்பது மட்டும் மிகத்தெளிவு.
புத்தளத்தில் PPAF உருவாக்கிய அரசியல் எழுச்சியை நசுக்குகின்ற பணியை தேசிய தலைவர்களும் உள்ளூர் அரசியல் வாதிகளும் இறுதியாக செய்தார்கள் என்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக கூட்டணியில் இணைய இருந்தவர்கள் KAB, YAHYA and THAHIR மட்டுமே. இறுதி நேரத்தில் தாஹிரும் ஒதுங்கி கொண்டார்.
PPAF இன் ஆரம்பம் முதல் அதனை எதிரியாகவும், அதனை இல்லாமல் செய்துவிட அதிகாரத்தில் இருந்து கொண்டு பல சூழ்ச்சிகளையும், முன்னெடுப்புக்களையும் செய்தவர் இந்த KAB என்பது யாவரும் அறிந்தததே!
இப்படி பட்டவர்களை PPAF இணைத்து கொண்டது மிக பெரிய குற்றமாக விமர்சனம் செய்யப்படுகின்றது?
உண்மைதான், PPAF வாக்குகளை பிரிக்காமல் ஒரு முகப்படுத்த கூட்டமைப்பு என்ற தூய முயற்சின் ஒரு பகுதியே இவர்களின் இணைவு, இது இவ்வாறு இருக்க தனித்து கேட்கவேண்டும்! சுயேச்சையாக போட்டியிட வேண்டும்! பெரிய காட்சிகளில் வெல்ல முடியாது! என்று வீராப்பு பேசியவர்கள் இறுதி நேரத்தில் பெரும்பான்மை கட்சிக்குள் சரணாகதி அடைந்தது மட்டுமல்லாது உருவாக இருந்த கூட்டணியை சிதைக்கவே முற்பட்டனர். இந்த உண்மைகளை மறைத்து விட்டு இப்போது PPAF யின் மீது குற்றம் சாட்டுகின்றனர். அல்லாஹ் அனைத்தையும் நன்கு அறிந்தவன்!
புத்தளத்தின் இன்றைய தேர்தல் களத்தை பார்த்தீர்களா?
ஒரு பெரும்பான்மை (UNP) கட்சியும் ஒரு சுயேச்சை குழுவும் போட்டியிடுகின்றன! மிகக்குறைந்த வாக்குகளில் (சுமார் 20,000 முதல் – 25,000 வரை) சுயேச்சை குழுவில் ஒரு MP யை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. KAB கூட்டணிக்குள் இணையாமல் இருந்திருந்தால் அவரும் இன்னொரு அணியாக களமிறங்கி இருப்பார் அல்லது UPFA யில் களமிரங்கி இருக்கலாம். அப்போது அரசியல் களத்தின் நிலை என்ன? எத்தனை பிரிவுகள் வந்திருக்கும்? மூன்று அல்லது நான்கு அணி களத்தில் குதித்திருந்தால் அப்போது உங்கள் விமர்சனங்கள் எப்படி இருந்திருக்கும்?
PPAF கொள்கையில் இருந்தது விலகி விட்டதா?
நிச்சயமாக இல்லை!, யாருடன் கூட்டணி அமைத்தாலும் அது நிறுத்தியுள்ள வேட்பாளர்களின் வெற்றிக்காகவே மட்டுமே உழைக்கும். PPAF ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குகின்ற மக்களுக்கு பொறுப்பு கூறும் தலைமைத்துவத்தை உருவாக்கின்ற தனது முயற்சிகளை மட்டுமே மேற்கொள்ளும்.
ஒட்டக கூட்டணி என்பது வாக்குகள் சிதறாமல் இருக்க உருவாக்க்கப்பட்ட தற்காலிக கூட்டணி மட்டுமே தவிர அது நிரந்தரமானது அல்ல. கூட்டணிக்குள் இணைந்துள்ள KAB மற்றும் YAHYA போன்றோர் PPAF யின் தலைமைத்துவ சபைக்கு கட்டுப்பட தேவை இல்லை, அது அவசியமும் இல்லை, PPAF வுக்கும் கூட்டணி வேட்பாளர்களுக்கும். இடையில் கொள்கை ரீதியான எந்த ஒப்பந்தமும் இல்லை. மாறாக தேர்தல் பிரச்சார களத்தில் இரு அணிகளும் செயற்படும் விதம் தொடர்பாக உடன்பாடு காணப்பட்டுள்ளது.
PPAF வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அதைக்கொண்டு ஏனைய கூட்டணி வேட்பாளர்கள் வெற்றியடைந்தால் எமது நிலை?
புத்தளம் சமூகம் தீர்மானிக்க வேண்டும் 26 வருடங்களுக்கு பின் மிகக்குறைந்த வாக்குகளில் ஒரு MP யை பெ|றும் சந்தர்ப்பத்தை PPAF உருவாக்கியுள்ளது. இதில் PPAF வேட்பாளர்களை வெற்றி பெற வைக்குமாறு வேண்டுகிறோம். ஒட்டக கூட்டணியில் யார் வெற்றி பெற்றாலும் அது மக்கள் தீர்மானமே தவிர PPAF யின் தீர்மானம் இல்லை.
மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கிய நிலையில் UNP வெல்லுவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்தும் ஏன் PPAF?
இது ஒரு பிரம்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை,
- மூன்று அல்ல நான்கு சிறுபான்மை வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார்கள். சிறுபான்மை தமிழர்களின் வாக்குகள் முழுமையாக கிடைக்க போவது இல்லை,
- மூவரும் ஒரு அணி அல்ல, மாறாக மூன்று தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள். தமது கட்சி வேட்பாளர் முன்னிலை பெற வேண்டும் என்ற போட்டியே காணப்படுகிறது.
- ஜனாதிபதி தேர்தலின் பின் வெளி தொகுதி UNP வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜண்டுகள் புத்தளம், கல்பிட்டி களத்தில் பகிரங்கமாக வேலை செய்கிறார்கள்.
- சகோதரர் நஸ்மி ஆனமடுவ வேட்பாளருக்கும் சேர்த்தே வாக்குகளை கேட்கிறார்.
வெளி தொகுதிகளுக்கு வாக்குகளை பிரிக்கும் தவறுகள் முன்பை விட அதிகமாகவும், வெளிப்படையாகவும் நடை பெறுகின்ற போது மீண்டும் பெரும்பான்மை கட்சிகளில் வெற்றிபெற முடியும் என்பது குருட்டு நம்பிக்கையே?
ஒட்டக கூட்டணிக்கும் PPAF வேட்பாளர்களுக்கு வாக்களித்து நல்லாச்சியை உறுதிபடுத்துவோம்.!
PPAF


0 Comments