அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான அமைச்சர் சிலர், விரைவில் இராஜினாமா செய்வார்கள் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவர்கள், தொடர்ந்தும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கோரியமைக்கு அமையவே அந்த பதவி விலகல்கள் இடம்பெறவுள்ளன.
இந்தநிலையில் தாம் அமைச்சு பதவியை விட்டு விலகவுள்ளமைக்கு மஹிந்த தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய நிலை உரையே காரணம் என்று மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே, ஜனக பண்டார தென்னக்கோன், பீலிக்ஸ் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோரே அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ள அமைச்சர்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் துமிந்த திஸாநாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம, விஜித விஜயமுனி சொய்ஸா ஆகியோர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக நீடிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments