எதிர்வரும் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு, எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காதென தேர்தல்கள் செயலக வட்டார தகவல்கள் உறுதி செய்துள்ளன.
அதிகமான இராணுவத்தினர் வசிக்கும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்திருந்தார்.
இராணுவத்தினர் வசிப்பதனால் அதிக வாக்குகளை தன்னால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே அவரது நோக்கமாக காணப்பட்டது. எனினும் வட மத்திய மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, மஹிந்த ராஜபக்சவை விட முன்னிலையில் உள்ளதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையினுள் தயாசிறி ஜயசேகரவின் விருப்பு வாக்குகளை குறைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நாட்களில் விளக்கமறியலில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவரினாலே இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறித்த முன்னாள் அமைச்சருக்கு பல காலமாக தயாசிறி ஜயசேகரவுடன் அரசியல் எதிர்ப்புகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


0 Comments