Subscribe Us

header ads

ஆர்.பிரேமதாஸ மைதானத்துக்குள் பொருட்களை கொண்டு செல்ல தடை


பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் போது, மைதானத்துக்குள் மதுபானம் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஒலிஎழுப்பி, கண்ணாடிகள், போத்தல்கள், கூரிய பொருட்கள், தீப்பற்ற வைக்கும் கருவி, தீப்பெட்டி போன்ற பொருட்களை இன்று போட்டியை பார்வையிட செல்பவர்கள் எடுத்துச்செல்ல முடியாது.

ஏற்கனவே நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியின் போது இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டமையை அடுத்து, இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய போட்டிக்கு கடும் பாதுகாப்பும் வழங்கப்படவுள்ளது.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments