சுயாதீன தொலைக்காட்சி பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டை நேரடி ஒளிபரப்புச் செய்யுமாரு விடுக்கப்பட்ட கோரிக்கையை சுயாதீன தொலைக்காட்சி சேவை மறுப்பு வெளியிட்டிருந்தது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் நிகழ்வுகள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட போதிலும் தமது நிகழ்வினை ஒளிபரப்புச் செய்ய மறுக்கப்பட்டமை எதனால் என்பது புரியவில்லை எனவும், சுயாதீன தொலைக்காட்சி பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments