Subscribe Us

header ads

எனக்கு வேட்புமனு வழங்காமல் இருப்பது ஏன்.. மேர்வின் கூறுவது என்ன?


தமக்கு வேட்பு மனு வழங்காமல் இருப்பதற்கு காரணங்கள் எதுவும் கிடையாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச் சாட்டுக்கள் கிடையாது.

நீதிமன்றில் வழக்குகள் தொடரப்படவில்லை, கட்சியின் ஒழுக்காற்று குழு என்னை குற்றமற்றவர் என அறிவித்துள்ளது.
இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எனக்கு வேட்பு மனு வழங்காமல் இருக்க எவ்வித காரணமும் இல்லை.
வேட்பு மனு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றேன்.
நான் உள்ளிட்ட சிலருக்கு வேட்பு மனு வழங்கப்படாது என செய்யப்படும் பிரச்சாரங்கள் வெறும் வதந்திகளாகும்.
வேட்பு மனு வழங்கப்படாது என இதுவரையில் எனக்கு எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
கடந்த காலங்களில் சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட காரணத்தினால் மூன்று குடும்ப உறுப்பினர்களை இழந்திருக்கின்றேன்.
வேட்பு மனு வழங்கப்படாவிட்டால் அது குறித்த எனது நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும் என சிங்களப் பத்திரிகையொன்றுக்கு மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments