Subscribe Us

header ads

ஜனாதிபதியிடம் ‘ஏதோ’ திட்டமிருக்கும்: ஹரின் நம்பிக்கை


நேற்றைய தினம் கூறப்பட்டது போல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்சவை ஐமசுமு வேட்பாளராக ஏற்றுக்கொள்ள இணங்கியது உண்மையாக இருந்தால் அது தொடர்பில் ஜனாதிபதியிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னான்டோ.
இது குறித்து அறிந்து கொள்வதற்குத் தான் காத்திருப்பதாகவும் இன்று சனிக்கிழமைக்குள் அவ்வாறு தெளிவுபடுத்தல் ஒன்று இடம்பெறாவிட்டால் இப்படியான துரோகங்கள் இடம்பெறும் அரசியலில் தான் நீடிக்க விரும்பவில்லையெனவும் ஒதுங்கி விடப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments