Subscribe Us

header ads

மஹிந்த தயாராவது எதை அடைய? ரணில் கேள்வி


மஹிந்த ராஜபக்ச தான் ‘தயார்’ என அறிவிக்கும் போஸ்டர் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். ஆனால் அவர் எதற்குத் தயார் என அறிவிக்கவில்லையென்பதால் குழப்பமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இரு தடவைகள் ஜனாதிபதியாக இருந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட்ட வரலாறு இல்லை. எனினும் அவர் தயார் என தெரிவித்துள்ளார். அவர் தயாராவது மீண்டும் குடும்ப ஆட்சியைக் கொண்டு வருவதற்கா? ஊழல் புரிவதற்கா? அல்லது நாட்டைக் குழப்புவதற்கா? என அவர் தெளிவாகக் குறிப்பிட்டால் நாமும் அதற்கேற்ப தயாராகலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் முன்னர் போன்று மஹிந்த ராஜபக்சவை தேர்தலில் வெல்ல வைக்க இப்போது பிரபாகரன் உயிரோடில்லை எனவும் தான் மஹிந்தவைக் களத்தில் சந்திக்க விரும்புவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments