Subscribe Us

header ads

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை,கொழும்பு உட்பட 4 மாவட்டங்களில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி


எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை,கொழும்பு உட்பட 4 மாவட்டங்களில் தமது அடையாளங்களுடன் தமது சொந்த முகவரிகளுடன் மக்கள் ஆணையை பெற களமிறங்க இருக்கும் தேசிய ஜனநாயக மனிதஉரிமைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவுக்கு வர இருப்பதாக கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தமது அறிக்கையில் இதுவரை 6 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 483 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று அவர்களுக்கான இறுதி நேர்முக தேர்வு தற்போது கொழும்பு-7  ஹோர்டன் பிளேஸ்சில் அமைத்துள்ள  கட்சி காரியாலயத்தில் இடம்பெற்று வருவதாகவும் அந்த விண்ணப்பங்களில் அதிகளவான இளம் தலைமுறையினரும் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களுடன் சட்டத்தரணிகள்,கல்வியலாளர்கள்,வர்த்தகர்கள்,என பல் துறை சாராரும் விண்ணப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

தேசிய ஜனநாயக மனிதஉரிமைகள் கட்சியின் நிறைவேற்று குழுவினரால் நேர்முக தேர்வுகள் நடாத்தப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இன்னும் சில நாட்களில் அந்த பட்டியல் மக்கள் மயபடுத்த உத்தேசித்துள்ளதாகவும் எங்களது கட்சி வேட்பாளர்கள் சக வேட்பாளர்களுக்கு சவாலாக அமைய கூடியவாறு இருப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஊடக இணைப்பார்
அப்துல் சத்தார் 
தேசிய ஜனநாயக மனிதா உரிமைகள்  கட்சி 

Post a Comment

0 Comments